ஒரு நாளைக்கு ரெண்டு லிட்டர் தண்ணீர் குடிச்சா பெண்டு நிமிர்த்தும் நோய்கள்

 
water

இந்த பூமியில் தோண்றிய அணைத்து உயிர்களும் வாழ தண்ணீர் அவசியம் ,அதனால் தான் நீரின்றி அமையாது உலகு என்று வள்ளுவர் கூறினார்

நம் உடலில் இருக்கும் எலும்பில் 22 சதவீதம் அளவிற்கு தண்ணீர் உள்ளது, ரத்தத்தில் 83%, மூளையில் 74%, தசைகளில் 75% தண்ணீர் உள்ளது. தண்ணீர் இல்லாமல் எந்த உயிரினமும் இவ்வுலகில் உயிர் வாழ முடியாது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நீரை ஒரு நாளைக்கு ரெண்டு லிட்டர் குடித்தால் மனித உடலுக்கு பலவகையான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

water can

1.சிறுநீரகங்களுக்குகான பணியை எளிமைப் படுத்துகிறது.

ஜீரணத்திற்கும் ,சிறுநீரக செயல்பாட்டுக்கும் ,மல சிக்கல் இல்லாமல் இருக்கவும் தண்ணீர் தேவை .

2.அரை மணி நேரத்திற்கு முன்பு நீரை பயன்படுத்தலாம்.

எடை குறைக்க விரும்புவோர் சாப்பிடுவதற்கு அரை மணி முன்பு ஒரு க்ளாஸ் தண்ணீர் குடிக்கலாம்

3.உடற்பயிற்சி செய்பவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

தசைகள், மூட்டுகள்,  இணைப்பு திசுக்காளை  சரியாக நகர்த்த நீர்  உதவுகிறது. உடற்பயிற்சி செய்யும் போது நுரையீரலையும் இதயத்தையும் நல்ல முறையில் இயங்கச் செய்கிறது.

4.உடல் பருமன் மற்றும் எடை அதிகரிக்கும் அபாயத்தை குறைக்கிறது.

சர்க்கரை உணவு மற்றும் குளிர்பானங்களை குறைத்துக்கொண்டு சரியான அளவில் நீர் எடுத்துக் கொண்டால் உடலில் உள்ள ஒட்டுமொத்த கலோரியின் அளவை நீர் கவனித்துக் கொள்கிறது.

5.நோய்கள் வராமல் தடுக்கிறது.

 உடலில் நோய் தோன்றுவதற்கு முதல் அடிப்படையான விஷயம் என்றால் உடல் வெப்பநிலை தான் சரியான முறையில் தண்ணீர் குடித்தால் நீங்கள் ஆரோக்கியமாக வாழ முடியும்.

6.அழகான சருமத்திற்கு தண்ணீரின் பங்கு.

  உடலுக்குள்ளும் ,வெளியேயும்  அழுக்குகள் ஏற்படாமல் இருப்பதற்கு தண்ணீரை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.