மஞ்சள் தூள், உப்பு கலந்த வெந்நீரால் வாய் கொப்பளித்தால் என்னாகும் தெரியுமா?

 
salt

இப்போது குளிர்காலம் முடிந்து கோடை காலம் தொடங்கி விட்டது .இந்த கோடை காலத்தில் பருவ நிலை மாற்றத்தால் பல்வேறு நோய்கள் தொற்று ஏற்படும் .இந்த நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும் ,குறிப்பாக தொண்டை வலி முதல் தொண்டை கரகரப்பு போன்ற தொல்லையிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளவும் ,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும்  சில இயற்கை குறிப்புகளை கொடுத்துள்ளோம் .அவற்றை படித்து பலன் பெறுங்கள் .புதினாவை மென்று சாப்பிடலாம் அல்லது வெந்தயம் சாப்பிட்டு தண்ணீர் குடிக்கலாம் .தேன் சிறந்த இம்முனிட்டி சக்தியை கொடுக்கும் .இதை ஒரு ஸ்பூன் சாப்பிடலாம்

turmeric

1.மஞ்சள் தூள், உப்பு கலந்த வெந்நீரால் வாய், தொண்டையை கொப்பளித்து வர ,தொண்டை சம்பந்தமான நோய்கள் அண்டாமல் காக்கலாம் .

2.சிலருக்கு இம்மியூனிட்டி பவர் குறைவாக இருக்கும் ,அவர்கள் காலை, இரவு வேளைகளில் மிளகு, மஞ்சள், பனங்கற்கண்டு கலந்த பாலை குடிக்கலாம்.

3.சிலருக்கு தொண்டை வலி இருக்கும் ,அவர்கள் ஆடாதோடை இலை, அதனுடன் 5 மிளகு, சுவைக்காக சிறிதளவு தேன் அல்லது பனங்கற்கண்டு கலந்து காலை, இரவு மென்று சாப்பிட்டு வர தொண்டை வலி, கரகரப்பு நீங்கும்.

4.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ,கிராம்பு-2, சிறிதளவு அதிமதுரம், சுக்கு, மிளகு, லவங்கப்பட்டை இவைகளை டீ போன்று தயாரித்து சுவைக்காக பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கலாம்