மஞ்சளுடன் வேப்பிலை சேர்த்து அரைத்து முகத்தில் தடவினால் முகத்தில் நேரும் அதிசயம் .

 
neem

பொதுவாக பருவ வயதில் அடிக்கடி முகத்தில் பருக்கள் தோன்றுவது உண்டு .இந்த பருக்கள் சிலரின் முகத்தில் நிரந்தர வடுக்களை உண்டாக்கி விடும் ,இன்னும் சிலருக்கு 30 வயதில் கூட வருவதுண்டு

வீட்டில் இருந்தப்படியே எப்படி முகத்தில் உள்ள பருக்ளை குறைக்கலாம் என் இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.

1.முதலில் வேப்பிலை - சிறிதளவு,தண்ணீர் மற்றும் மஞ்சள் ஒரு ஸ்பூன் எடுத்து கொள்வோம்

turmeric

2.அடுத்து  ஒர்  பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதனுடன் வேப்பிலை மற்றும் மஞ்சள், கற்றாழை சேர்த்து 7 நிமிடங்கள் கொதிக்க வைத்து ஆவிப்பிடிக்க வேண்டும்.

3.பின்னர் மஞ்சள் துண்டுகளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்துக்கொள்ளவும்.

4.அடுத்த நாள் காலையில் மஞ்சள் மற்றும் வேப்பிலை சேர்த்து அரைத்து முகத்தில் தடவி விடவும் .

5.பின்னர்  15 நிமிடங்கள் வைத்து, பின்னர் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்ய பருக்கள் நீங்கும்

6.அடுத்து ஆரஞ்சு தோல் பொடி - 1 தே.கரண்டி,தேன் ஒரு ஸ்பூன் ,பால் 2 ஸ்பூன் எடுத்து கொள்வோம்

7.பின்னர் ஆரஞ்சு தோல் பொடி மற்றும் தேன், பால் சேர்த்து பேஸ்ட் செய்துக்கொள்ளவும்.

8.அதன் பின் ஒரு  துண்டை வைத்து மேற்கூறிய பேஸ்டை முகத்தில் தடவி வரவும்

9.பின்னர் 15 நிமிடங்கள் வைத்து விட்டு இந்த பேஸ்டை கழுவிவிடவும் 

10.இப்படி அடிக்கடி செய்தால் முகப்பருங்கள் வருவது முற்றிலும் குறையும்.