மஞ்சள் பாலில் பாதாம் சேர்த்து குடிச்சா என்ன நன்மை தெரியுமா ?

 
yellow milk benefits

பொதுவாக பாலில் ஏராளமான கால்சியம் நிறைந்துள்ளது .அதனால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை மூட்டுகளுக்கு ,பற்களுக்கும் ஆரோக்கியம் பெற அதிகம் பால் குடிக்கலாம் .இந்த பாலுடன் எதை சேர்த்து குடித்தால் நம் ஆரோக்கியம் மேம்படும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்

cold

1.சிலருக்கு திடீரென ஜலதோஷம்பிடித்து கொள்ளும் .இந்த ஜலதோஷம் மற்றும் காய்ச்சலைத் தடுக்க ஒவ்வொரு நாளும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் எடுத்துக் கொள்ள நல்ல பலன் உண்டு

2.சிலருக்கு தூக்கம் வராது .அப்போது உறங்கும் முன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான மஞ்சள் பால் குடிப்பது உங்களுக்கு நல்ல தூக்கமின்மையை போக்கும் 

3.அடுத்து சிலருக்கு பலவீனமான எலும்பு இருக்கும் .அவர்கள் அரைத்த பாதாம்  பேஸ்ட்டை மஞ்சள் பாலில் சேர்த்து குடிக்க நல்ல பலன் உண்டு ,

4.இந்த பாதாம் பாலில்  வைட்டமின் டி மற்றும் கால்சியம் நிறைந்திருக்கிறது . அது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நம்மை காக்கிறது

5.அடுத்து இந்த மஞ்சள் கலந்த பாலுடன் அத்திப்பழத்தை சேர்த்து குடிக்க நல்ல பலனுண்டு

6.இந்த சூடான பானம்  உங்கள் தூக்கத்தைத் தூண்ட உதவுகிறது.

7.அடுத்து பேரீச்சம்பழம் மஞ்சள் பாலில் சேர்த்து குடிக்கலாம் .இந்த கலவையில்  மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற பல தாதுக்கள் அதிகமாய் உள்ளது

8.மேலும் இது நம் உடலில் இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்த உதவும்.

9.மேலும், இந்த உலர் பழம் நம்  மூட்டு வலியைப் போக்கலாம்