துளசி இலை, பாகற்காய் இலை இரண்டையும் தேனில் கலந்து சாப்பிட்டால் எந்த நோய் ஓடி போகும் தெரியுமா

 
Bitter Gourd

பொதுவாக தோட்டத்திலும் அதிக ஈரப்பதம் உள்ள இடங்களிலும் கொடி போல வளரக்கூடியது இந்த பாகல் இலைகளும் ,பாகற்காயும் .நாம் இனிப்பு ,புளிப்பு ,துவர்ப்பு சுவைக்கு தரும் முக்கியத்துவத்தை இந்த கசப்பு சுவைக்கு தருவதில்லை .ஆனால் இந்த பாகற்காய் இலையில் இருக்கும் மருத்துவ குணம் தெரிந்தால் நாளை முதல் இதை ஒதுக்க மாட்டிர்கள் .இதை துவையலாக அரைத்து குழந்தைங்களுக்கு கொடுத்தால் அவர்கள் அதிகம் சுவீட் சாப்பிடுவதால் உண்டாகும் கீரிப்பூச்சி முதல் பல்வேறு வயிற்று பூச்சிகள்  ஒழிந்து அவை மலத்தின் மூலம் வெளியேறிவிடும் .மேலும் பித்தம் ,கபம் ,நீரிழிவு ,மல சிக்கல் போன்ற நோய்களுக்கும் மருந்து .மேலும் இந்த இலையுடன் சீரக தூள் கலந்து கொடுத்தால் விஷ காய்ச்சல் குணமாகும் .இந்த இலையுடன் மிளகு சேர்த்து கண்ணில் பற்று போட்டால் கண் சார்ந்த நோய்கள் ஓடி விடும் .மேலும் இந்த இலையின் நன்மைகளை பார்க்கலாம்

tulsi

1. தினமும் காலையில் துளசி இலை, பாகற்காய் இலை இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்து தேனில் கலந்து சாப்பிட்டு வரலாம்.ஆஸ்துமா, சளி, இருமல் போன்றவற்றைத் தீர்ப்பதில் மிகச்சிறந்த நிவாரணியாகப் பயன்படுகிறது.

2.பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால் குடலில் உருவாகும் புழுக்கள், ஒட்டுண்ணிகளைக் கொல்ல உதவுகிறது. மேலும் இரைப்பை பிரச்னைகளுக்கு நல்ல மருந்தாக உள்ளது. ஒவ்வாமை, வீக்கம், கட்டிகளையும் பாகற்காய் போக்கும்.

3.பாகற்காயையோ, அதன் இலைகளையோ போட்டு கொதிக்கவைத்த தண்ணீரை தினமும் குடித்தால் வந்தால், நோய்த்தொற்றுகள் அண்டாமல், உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.