எந்த நோயுள்ளோருக்கு தக்காளி விஷமாக மாறும் தெரியுமா ?

தக்காளியில் இல்லாத சத்துக்களே இல்லை என்று கூறலாம் .இதில் பல விட்டமின்கள் மற்றும் இரும்பு சத்து முதல் பொட்டாசியம் சத்துக்கள் வரை அடங்கியுள்ளது ,மேலும் இதை சிறு வயது முதல் உண்டு வந்தால் ,முதுமை வயதில் வர கூடிய ப்ராஸ்டேட் கேன்சர் முதல் பெண்களுக்கு வரக்கூடிய கர்ப்பப்பை கேன்சர் வரை தடுக்கும் ஆற்றல் உண்டு
தக்காளியை தொடர்ந்து சாப்பிடுவதால் சருமப் பாதுகாப்புக்கு மிகவும் நன்மை செய்யும் ஆற்றல் கொண்டது
நம் உடலில் ஓடும் இரத்தத்தில் உணவு மூலம் நச்சுக்கள் சேரும் ,இந்த ரத்தத்தை சுத்திகரிக்க தக்காளி பெரிதும் உதவுகிறது.
மேலும் சிலருக்கு கல்லீரலில் பாதிப்பு உண்டாகும் ,இப்படி ஏற்படக்கூடிய பாதிப்புகள் (சிரோஸிஸ்), கால்பிளாடரில் ஏற்படும் 'கால்ஸ்டோன்ஸ்' என்னும் கற்களை கரைக்கவும் வல்லது.
சிலருக்கு இருதயத்தில் கொலஸ்ட்ரால் சேர்ந்து பாதிப்பு வரும் ,இப்படி பாதிக்கக்கூடிய அதிக கொலஸ்ட்ராலை குறைக்கவும், உடலில் ஏற்பட்டிருக்கும் தொற்று நோய்களை சீர் செய்யவும் தக்காளியில் உள்ள நிகோடினிக் அமிலம் உதவுகிறது.
ஆனால் சிறுநீரகம் செயலிழந்தவர்கள்,டயாலிசிஸ் செய்து கொள்பவர்கள்,டயாலிசிஸ் செய்வதற்கு முந்தைய ஸ்டேஜில் உள்ளவர்கள், கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பவர்கள் தக்காளியை எடுத்து கொள்ள கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்