வெறும் வயிற்றில் தக்காளி சாப்பிட்டால் உங்க குடலில் என்ன நடக்கும் தெரியுமா ?

 
tomato

 

பொதுவாக காலையில் காலி வயிற்றில் நாம் உண்ணும் உணவுகள் சில நம் அன்றைய முழு நாளையும் பாதித்து விடும் .அப்படி எந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் என்ன பாதிப்பு உண்டாகும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்

 

சில உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். எந்தெந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது என்று பார்ப்போம். 

tomato

1.சிலர் வெறும் வயிற்றில் தயிர் சாப்பிடுவர் .தயிரில் லாக்டிக் அமிலம் இருப்பதால் வெறும் வயிற்றில் சாப்பிடகூடாது .

2.அப்படி மீறி சாப்பிட்டால் தயிரில் உள்ள பக்டீரியாக்களானது, வயிற்றிலுள்ள அமிலங்களுக்கு இடையூறு விளைவிக்கும்.

3.சிலர் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவர் .வாழைப்பழம் குடல் ஆரோக்கியத்துக்கு நலம் சேர்க்கும். இருப்பினும் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இரத்தத்தில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் அளவுகளில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு பாதிப்பு உண்டாக்கும் .

4.இது தேவையற்ற அசிடிட்டி பிரச்சினைகளுக்கு வழிவகை செய்யும்.

5. தக்காளியை கூட வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது .இதில் உள்ள டானிக் என்ற அமிலம் இரைப்பை அமிலத்துடன் வினைபுரிவதால், வயிற்றில் அசௌகரியம், எரிச்சல் போன்ற தொல்லைகள் உண்டாகும் .

6.அதனால் வெறும் வயிற்றில் தக்காளியை உண்ண கூடாது .

7.பலர் வெறும் வயிற்றில் காப்பி குடிப்பர் .வெறும் வயிற்றில் காப்பி குடிப்பதால் உடலில் அமிலத்தன்மையின் அளவு அதிகரிக்கிறது.

 8.அதுமாத்திரமின்றி காப்பி மூலம் நெஞ்செரிச்சல், அஜீரணம் போன்ற பிரச்சினையும் ஏற்படுகின்றது.