தைராய்டு உள்ள பெண்கள் தாய்மையடையும் வழிகள்

 
baby leg

இன்று இந்த நவீன காலத்தில் பலருக்கு சர்க்கரை நோய் போல் தைராய்டு நோயும் இருக்கிறது ,குறிப்பாக பெண்களுக்கு இந்த நோய் அதிகம் தாக்குகிறது .இதனால் அவர்கள் கர்ப்பம் தரிப்பதில் பிரச்சினை உண்டாகிறது .இதற்கு ஆங்கில மருத்துவத்தில் பரிசோதனை மற்றும் மாத்திரை இருந்தாலும் சில முன்னெச்சரிக்கை எடுப்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

thyroid

பெரும்பாலான பெண்கள் ஹைப்போ தைராய்டினால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் உடல் எடை அதிகரிப்பு, ஒழுங்கற்ற மாதவிடாய் நிலை போன்றவை ஏற்படுகிறது. இவை கர்ப்பம் தரிப்பதில் சிக்கலை உண்டாக்குகின்றன. தைராய்டு உள்ள பெண்கள் தாய்மையடையும் பல வழிகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன

1.பெண்கள் தாய்மை அடைவதற்கு முயற்சிக்கும் முன் தைராய்டு பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்

 2.சில பெண்களுக்கு தைராய்டு ஹார்மோன் குறைவாக சுரப்பின் மருந்துகள் மற்றும் மாத்திரைகள் மூலம் TSH,T3,T4 ஹார்மோன்களின் சமநிலை பாதுகாக்கபட்டு பின்னர் கருத்தரிக்க முடியும் 

3. பெண்கள் எளிதில் கர்ப்பம் அடைய அடிக்கடி பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

4.கர்ப்பிணி வயிற்றில் வளரும் குழந்தையின் முக்கிய பாகங்கள் முதல் மூன்று மாத காலத்தில் உற்பத்தியாகி வளர்ச்சி அடைகிறது.

5.குழந்தையின் மூளை, நரம்பு மண்டலம் உற்பத்தியாக மற்றும் வளர்ச்சியடைய தாயிடமிருந்து முதல் மூன்று மாத காலத்தில் உற்பத்தியாகி குழந்தைக்குச் செல்லும் தைராய்டு ஹார்மோன் மிக அவசியம்.

6.தாய்க்கு தைராய்டு பிரச்சினை இருக்கும் பட்சத்தில் அது கண்டறியப்படாமல் சிகிச்சை அளிக்கப்படாமல் இருந்தால் குழந்தை வளர்ச்சியை பாதிக்கும். கருச்சிதைவு ஏற்படும் அபாயம் அதிக அளவில் உள்ளது