தைராய்டு நோயை சரி செய்யும் வழிகள்
இன்று பெண்களிடையே அதிகம் காணப்படும் ஒரு நோய் எதுவென்றால் அது தைராய்டு .இந்த நோயால் ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் .தைராய்டு குறைபாடு இருப்போர் எந்த உணவை சேர்க்கலாம் எதை தவிர்க்கலாம் என்று பார்க்கலாம்
1.தைராய்டு குறைபாடு இருப்போருக்கு உடல் எடை கூடும் .அதனால் உடல் எடையை குறைப்பதற்கு நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை சாப்பிடவேண்டும்.
2.தைராய்டு குறைபாடு இருப்போருக்கு மல சிக்கல் இருக்கும் .அதனால் நார்ச்சத்து செரிமானத்தை ஒழுங்குபடுத்தும். நச்சுப்பொருள்களை உடலிலிருந்து வெளியேற்றும்.
3.தைராய்டு குறைபாடு இருப்போர் பழங்கள், காய்கறிகள், பயிறுகள் ஆகியவற்றை தினமும் சாப்பிடவேண்டும்.
4. மேலும் தைராய்டு குறைபாடு இருப்போருக்கு தைராய்டை தூண்டக்கூடிய ஹார்மோன் உடலில் அதிகம் சுரப்பதற்கு செலினியம் தாது உதவும்.
5.தைராய்டு குறைபாடு இருப்போருக்கு உடல் எடை அதிகரிப்பதற்கு நிலையற்ற அணுக்களான (ஃப்ரீ ராடிகல்ஸ்) காரணமாகின்றன.
6.செலினியம் ஃப்ரீ ராடிகல்ஸை குறைக்கிறது. உடலின் நோய் எதிர்ப்பாற்றலை செலினியம் அதிகரிக்கிறது .
7.தைராய்டு குறைபாடு இருப்போர் சிறுமீன்கள், முட்டை, பருப்பு வகைகள் ஆகிய செலினியம் அதிகம் உள்ள உணவை சாப்பிடணும்
8.தைராய்டு குறைபாடு இருப்போர் சர்க்கரை அதிகமுள்ள உணவு, சிறுதானியங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சேர்த்து கொள்ள வேண்டாம்
9.தைராய்டு குறைபாடு இருப்போர் சோயா வகைகள், பேரிக்காய், ஸ்ட்ராபெர்ரி, பிரெக்கோலி,தவிர்ப்பது நலம்
10.தைராய்டு குறைபாடு இருப்போர் காலிபிளவர், முட்டைகோஸ் போன்ற உணவுகளை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்.
11.தைராய்டு குறைபாடு இருப்போர் ஒழுங்காக உடற்பயிற்சி செய்வது, போதிய நீர் அருந்துவது, சாப்பாட்டு அளவை குறைத்துக்கொள்வது ஆகியவை தைராய்டு பிரச்னையை கட்டுப்படுத்த உதவும்..


