தைராய்டால் பாதிக்கப்படும் உடல் உறுப்புகளின் பட்டியல்

 
thyroid

தைராய்டு நோய் பொதுவாக அதிகம் பெண்களைத்தான் தாக்கும் .இந்த நோய் வந்தால் ஹார்மோன் சுரப்பதில் மாற்றம் உண்டாகும் .மேலும் எடை கூடும் அபாயம் உள்ளது .இதற்கு முறையாக சிகிச்சை மேற்கொள்ளாவிடில் மஞ்சள் காமாலை மற்றும் கோமா நிலை கூட ஏற்படலாம் .இதை ஆரம்பத்திலே கண்டறிந்து விட்டால் குணப்படுத்துவது எளிது .சிலருக்கு இந்த தைராய்டு காரணமாக முறையற்ற மாதவிலக்கு ,கருத்தரிக்காமல் இருத்தல் போன்ற பிரச்சினைகள் தோன்றும் .கழுத்து பகுதியில் உள்ள ஒரு சுரப்பியில் உண்டாகும் குறைபாடே தைராய்டு நோயின் பாதிப்பு .

. மனித உடலின் நான்கு முக்கிய உறுப்புகளை தைராய்டு பிரச்சனை பாதிக்கிறது. இது தொடர்பான பல தகவல்கள் பலருக்கும் அறிய வைக்கிறோம்

இந்த ஹார்மோன்கள் பின் வருவனவற்றில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

thyroid

1.சுவாசம்

2.இதயத்துடிப்பு

3.செரிமான மண்டலம்

4.உடல் வெப்பநிலை

இது மட்டுமில்லாமல், இந்த ஹார்மோன்கள் சமநிலையை இழக்கும் போது உடலின் எடை கூடவோ, குறையவோ தொடங்குகிறது. இதுவே தைராய்டு பிரச்சனை என்று அறியப்படுகிறது. இந்த நோய் பரம்பரையாகவோ அல்லது அயோடின் சத்து குறைப்பட்டாலோ தோன்றுகிறது