பெண்களின் தைராய்டு பிரச்சினை என்ன பாதிப்பை தரும் தெரியுமா ?
பொதுவாக அந்த காலத்து பெண்களுக்கு ஐம்பது வயதிற்கு மேல்தான் மாத விடாய் நின்று போகும் .ஆனால் இந்த காலத்தில் மாறி விட்ட உணவு மற்றும் வாழ்வியல் முறையால் சீக்கிரமே மாத விடாய் விடை பெற்று சென்று விடுகிறது .இந்த பெண்களின் சீரற்ற மாதவிடாய்க்கு என்ன காரணம் என்று இந்த பதிவில் பாக்கலாம்
1.பெண்களின் சீரற்ற மாதவிடாய்க்கு ஹார்மோன்களின் சமச்சீரின்மை அரிதாகவே ஏற்படும் ஒரு காரணமாகும்.
2.ஹார்மோன் சமநிலையில்லாமல் இருக்கும் போது, பி.சி.ஓ.எஸ் ஏற்படும். இது கருமுட்டைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.
3.சிலர் உடற்பருமனுடன் இருப்பர் .இந்த உடற்பருமன் அதிகரிக்கும்போது மாதவிடாய் சுழற்சியைப் பாதிக்கும்.
4.எனவே பெண்களின் சீரான மாதவிடாய்க்கு உடல் எடையைக் குறைப்பதுடன் உடலுக்கு சக்தியை வழங்கக் கூடிய உணவுகளை உண்ண வேண்டும்
5.. சிலருக்கு அதிகப்படியான மன அழுத்தம் இருக்கும் .இது மாதவிடாய் சுழற்சியில் தாமதத்தை ஏற்படுத்தலாம். இதனால் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுகிறது.
6.சிலர் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பர் .இப்படி கொடுப்பதால் மாதவிடாய் தள்ளிப் போகலாம்
7.ஆனால் குழந்தை பால் குடியை மறந்ததும் மீண்டும் மாதவிடாய் வழக்கமானதாக மாறும்.
8.பெரும்பாலும் 45 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நின்றுவிடும்.
9.மாதவிடாய் சுழற்சி முடியப்போகும் சில மாதங்களுக்கு முன்னர் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படும்.
10.அதிகம் செயல்படும் அல்லது செயல்படாத தைராய்டு சுரப்பி மாதவிடாய் பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கலாம்.
11.இந்த தைராய்டு பிரச்சினை கரு உருவாதலில் கூட பிரச்சினையை ஏற்படுத்தலாம்.

