பல உடல் கோளாறுகளை கொடுக்கும் தைராய்டு கோளாறை வெல்லும் வழி

 
thyroid

பொதுவாக ஒருவருக்கு தைராய்டு கோளாறு இருந்தால் அது பல நோய்களை கொடுக்கும் .பெண்களுக்கு இந்த தைராய்டு கோளாறு இருந்தால் அது மாதவிடாய் கோளாறு முதல் கருத்தரிப்பு பிரச்சினை வரை கொடுக்கும் .இந்த தைராய்டுக்கு ஒரு இயற்கை மருந்து எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்

thyroid

1.முதலில் அரை மூடி தேங்காயை துருவி கொண்டு ,அதை  தண்ணீர்விட்டு அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

2.ஒருபாத்திரத்தை அடுப்பில் வைத்து விடவும் .அதில் துருவிய தேங்காயை சேருங்கள்.

3.அதில் ஆட்டுப்பாலை ½ டம்ளர் சேர்த்து,குறைந்த தீயில் அந்த கலவையை கிளறிவிடுங்கள்.

4.பின்னர் அந்த கலவையில் 1 ஆடாதோடா இலையில் பாதி இலையை இடித்து எடுத்து கொள்ளவும் .பின்னர் பேஸ்ட் போல வரும்போது அதனை இந்த பாலோடு சேரத்துக்கொள்ளுங்கள்.

5.பின் பனை வெல்லத்தை இடித்து எடுத்துக்கொள்ளுங்கள்.

6.குறைந்த தீயில் அந்த கலவையை கிண்டிவிட்டு பனைவெல்லத்தை சேருங்கள்.

7.இத்தோடு 3 காய்ந்த மிளகாய் அத்தோடு சித்தரத்தை 5 g மற்றும் சுக்கு 3g, 20 மிளகு அனைத்தையும் பொடி செய்து வைத்து வேகும் பாலோடு இந்த பொடியையும் சேர்த்து கொதிக்க விடவும் .

8.பின்னர் அந்த கலவையுடன் 50 ml நெய்யை சேர்த்துக்கொள்ளுங்கள்.

9.சரியான பதத்தில் இருக்கும்போது செய்த மருந்து பாத்திரத்தில் ஒட்டாது.

10.இதனை தினமும் காலை உண்டால் மாதவிடாய் பிரச்சினை தைராய்டு   பிரச்சினை நீங்கி ஆரோக்கியமாக வாழலாம்.