தொப்பையால் அவஸ்தை படுறவங்க சப்பையாக மாற ஒரு அற்புத பானம்

 
ten tips for thoppai

தொப்பை, தொந்தி என்று சொல்லப்படும் இந்த வயிற்று கொழுப்பை ஆண்கள் மட்டுமே கொண்டிருந்த காலங்கள் உண்டு. ஆனால் இப்போது நண்டு சிண்டுகள் முதல் வயதானவர்கள், பெண்களை கூட விட்டுவைக்கவில்லை. இன்று இளவயதிலேயே அதிக எடையை கொண்டிருப்பவர்கள் கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் எடையை குறைத்தாலும் வயிறு தொப்பை மட்டும் குறையவில்லையே என்னும் வருத்தம் இருக்கும்.
தொப்பை வயிறு உடல் எடையை அதிகரித்துகாட்டுகிறது என்பதை காட்டிலும் இது ஆரோக்கிய குறைபாட்டையும் உண்டாக்கிவிடுகிறது.

உணவு முறையில் அதிகம் எண்ணெய் சேர்த்த உணவுகளை எடுத்துகொள்வதன் மூலம் அது உடல் தொப்பையை உண்டாக்கிவிட செய்யலாம். இது சிறுக சிறுக படிந்து வயிற்று தொப்பையை உண்டாக்கிவிடும்
தொப்பை என்பது பரம்பரையாக வருகிறது என்று பலரும் நினைத்து சமாதானம் ஆகிறார்கள், ஆனால் தொப்பைக்கும் பரம்பரைக்கும் சம்பந்தம் இல்லை. பரம்பரையாக உணவு முறையை ஒரே மாதிரி எடுத்துகொள்வதால் உதாரணத்துக்கு எண்ணெய் பண்டங்கள் அதிகம் சேர்ப்பதால் தொப்பை உருவாகலாம். அதனால் பரம்பரை வழியாக வராது.

 

தொப்பையை வேகமாக குறைக்க உதவும் ஓர் அற்புத பானம் ஒன்று உள்ளது.  இந்த பானத்தை தினமும் குடித்து வர, உங்கள் வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றி தேங்கியுள்ள கொழுப்புக்கள் குறைந்து, சிக்கென்று மாறலாம்.

இப்போது தொப்பையை வேகமாக கரைக்க உதவும் அந்த பானத்தை எப்படி தயாரிக்கலாம் என்பதை பார்ப்போம். 

தேவையான பொருட்கள்

இஞ்சி - 1 டீஸ்பூன்

எலுமிச்சை - 1

கற்றாழை ஜூஸ் - 1 டேபிள் ஸ்பூன்

வெதுவெதுப்பான நீர் - 1 டம்ளர்

தேன் - சிறிது செய்முறை

செய்முறை

முதலில் இஞ்சியை கற்றாழை ஜூஸில் போட்டு கிளறி 30 நிமிடம் ஊற வைக்கவும். பின் அதில் எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்து சேர்த்து கலந்து, 5 நிமிடம் கழித்து, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீர் மற்றும் தேன் சேர்த்து கலந்து, உடனே குடிக்க வேண்டும்.

இந்த ஜூஸை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

அப்படி இந்த ஜூஸைக் குடித்தால், ஒரு மணிநேரத்திற்கு எதையும் சாப்பிடக்கூடாது. மேலும் இந்த ஜூஸை ஒரு நாளைக்கு 1-2 முறைக்கு மேல் குடிக்கக்கூடாது.