தொப்பைக்கு குட் பை சொல்ல இந்த ரெண்டு விஷயம் போதும்

 
Belly Fat

தொப்பையை குறைக்க இன்று பலர் படாத பாடு படுகிறார்கள் .தினம் வாக்கிங் ,ஜாக்கிங் ,சைக்கிளிங் செய்தாலும் நிறைய குப்பை உணவுகளான ஜங்க் புட் சாப்பிட்டு தொப்பையை குறைக்க முடியாமல் அவதி படுகின்றனர் ,மேலும் எதற்கெடுத்தாலும் வண்டியில் போகாமல் கொஞ்சம் நடந்து செல்லுங்கள் .அது மட்டுமல்லாமல் குப்புற படுத்து தூங்கினாலும் தொப்பை குறைய வாய்ப்புள்ளது

தொப்பையை குறைக்க விரும்புவோர் காலையில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது தொப்பையைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல் தொப்பையை குறைக்க விரும்புவோர் தொப்பையை மட்டுமல்ல உடல் பருமனையும் குறைக்க எளிதான மற்றும் பிரபலமான செய்முறை எலுமிச்சை சாற்றுடன் தேன் மற்றும் வெந்நீர் கலந்து பருகுவது ஆகும். இதற்கு பலரிடம் நல்ல ரிசல்ட்டை கொடுத்துள்ளது

ten tips for thoppai

தொப்பையை குறைக்க விரும்புவோர் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த காலை உணவை உட்கொள்வது நாள் முழுவதும் பசியைக் குறைக்க உதவும். அத்தகைய காலை உணவு நாள் முழுவதும் உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. அடிக்கடி ஏற்படும் பசியை விலக்கி வைக்கிறது. இதன் விளைவாக, உணவு உட்கொள்ளல் குறைகிறது. அதனால் முட்டை, தயிர் மற்றும் பருப்பு வகைகள்,ரொட்டி , போன்றவற்றை காலை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.இதற்கும் பல தொப்பை நண்பர்களை சப்பையாக்கி நல்ல ரிசல்ட்டை கொடுத்துள்ளது

தொப்பையை குறைக்க விரும்புவோர் குளிர்ச்சியான பண்புகளைக் கொண்ட சீரகம் வயிற்றை குளிர்விக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, எடை இழப்புக்கு உதவுகிறது.. வெறும் வயிற்றில், சீரகத்தை தண்ணீருடன் கொதிக்க வைத்து குடிக்கலாம். வெறும் வயிற்றில் குடிப்பதோடு, சீரகத் தண்ணீரை எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம்.மேலும் ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் தண்னீர் பருகினால் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் ஸ்லிம்மாக இருக்கும்