தொப்பையை குறைக்க இந்த குப்பை உணவுகளை ஒதுக்குங்க

 
belly

தொப்பையை குறைக்க நினைப்பவர்கள் வயிற்றுக்கு ஒத்துவராத உருளைக்கிழங்கு சிப்ஸ் ஒதுக்கணும் என்று  ஹார்வேர்டு பல்கலைக்கழக ஆய்வுகள் கூறுகிறது. அதனால்  , உருளைக்கிழங்கு சிப்ஸுக்கு நோ சொல்லுங்க.

அடுத்து தொப்பையை குறைக்க நினைப்பவர்கள் பிஸாவினை ஒதுக்கணும் .  உருளைக்கிழங்கு சிப்ஸை போலவே பிஸாக்களிலும் பூரிதமான கொழுப்பு (சாச்சுரேட்டட் ஃபேட்) உள்ளது. அதனால் வயிற்றில் சதை விழும்.

நம்ம ஊரு pizza…கறி தோசை செய்வது எப்படி?

தொப்பையை குறைக்க நினைப்பவர்கள் ஃப்ரைசை ஒதுக்கணும் . ஃபிரெஞ்ச் ஃப்ரைஸை தொடர்ந்து தின்று வருபவர்களுக்கு ஒவ்வொரு நான்கு ஆண்டு காலத்திலும் வழக்கத்தை விட 1.5 கிலோ எடை அதிகரிக்கும் என்றும் ஹார்வேர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

பேக்கரி பண்டங்கள் வயிற்றுப் பகுதியில் சதையை அதிகப்படுத்தக்கூடியவை ஆகும். இதை ஒதுக்கணும்

ஐஸ்கிரீம் வெயில் காலம் வந்தால் ஐஸ்கிரீமை அதிகமாக சாப்பிடுகிறோம். ஐஸ்கிரீம் அதிக அளவு கார்போஹைடிரேடு நிறைந்ததாகும். இவற்றை தொடர்ந்து தின்றால் வயிற்றுப் பகுதியில் கொழுப்பு படியும். வயிறு தொப்பையாகும்.

தொப்பையை குறைக்க நினைப்பவர்கள்சாக்லேட்டை ஒதுக்கணும் .இதில்   கலோரி நிறைய இருக்கும். பால் நிறைந்த சாக்லேட் (மில்க் சாக்லேட்) உடல் எடையை நிச்சயமாய் அதிகரிக்கும்.

 வயிற்று சதை குறையவேண்டும் என்று முயற்சிப்பவர்கள் ஒயிட் பிரெட் சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும். ஆகவே தொப்பையை குறைக்க நினைப்பவர்கள் ..மேற்கூறிய உணவுகளை ஒதுக்கி ஆரோக்கியமாக இருங்கள்