பல் மற்றும் ஈறுகள் ஆரோக்கியத்துக்கு பத்து நிமிஷ வைத்தியம் .

 
tooth brush

பொதுவாக நம் பல் மற்றும் ஈறுகள் ஆரோக்கியமாய் இருந்தால் அதன் மூலம் பல நோய்கள் வராமல் தடுக்கலாம் .இப்போதெல்லாம் பல் சிகிச்சைக்கு பல் டாக்டரிடம் சென்றால் நம் பர்ஸ் காலியாகிவிடும் ,அந்தளவுக்கு பல் வைத்தியம் காஸ்டலியான சிகிச்சை .இந்த பல் ஆரோக்கியத்துக்கு வீட்டிலேயே தயாரிக்கும் ஒரு பல் பொடி பற்றி இந்த பதிவில் பாக்கலாம்

teeth

1.முதலில் பெருஞ்சீரகம் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து கொண்டு அதனுடன்

கிராம்பு பொடி ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்து எடுத்து கொள்ளவும்

2.பின்னர் கடுக்காய் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து வைத்து கொள்வோம் .இந்த மூன்று பொருட்களுடன்

மாதுளை பழத்தின் தோல்  ஒரு டேபிள் ஸ்பூன் பொடி செய்து எடுத்து வைத்து கொள்வோம்

3.அடுத்து மேற்சொன்ன நான்கு பொருட்களுடன் அதிமதுரம் பொடி ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து கொள்வோம்

4.அடுத்து மேற்சொன்ன ஐந்து  பொடிகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்துக் எடுத்து கொள்வோம் 

5.பின்பு இந்த பொடியை வைத்து காலை மாலையில் பல் துலக்கி வாய் கொப்பளிக்க வேண்டும்.

6.இந்த பொடிகளை  பயன்படுத்தி பல் துலக்கும் போது ஆள்காட்டி விரலை பயன்படுத்தி பல் துலக்குங்கள்.

7.இந்த பொடி மூலம்  மலச்சிக்கல் போன்ற வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் இருந்தாலும் உடனடியாக நம் உடலை விட்டு போகும் ,மேலும் பற்கள் மற்றும் ஈறுகளும் ஆரோக்கியமாய் இருக்கும் .