தீபாவளிக்கும் பல் வலிக்கும் என்ன தொடர்பு ?படிங்க புரியும்

 
tooth

பிரசவ வலியை விட கொடுமையானது எந்த வலியென்றால் அது பல்வலிதான் என்று பல்வலியால் பாதிக்கப்பட்டவர்கள் கூறுவதை கேட்டிருப்போம் .அந்தளவுக்கு அந்த பல் வலி நம்மை பாடாய் படுத்தி விடும் .மேலும் அந்த பல்வலி இருக்கும்போது தலைவலியும் சேர்ந்து கொல்லும் .எனவே இந்த பல்வலிக்கு இந்த தீபாவளி நேரத்தில் செய்யப்படும் ஸ்வீட், முறுக்கு, அதிரசம் போன்ற இனிப்பு பொருட்களை தவிர்க்க வேண்டும் .பல்வலி வந்தால் கிராம்பு சிறந்த தீர்வு ,அதை பல்வலி க்கும் இடத்தில வைத்தால் வலி பறந்து போகும் .அடுத்து கொய்யா இலையும் சிறநத தீர்வாகும் .இந்த பல்வலிக்கு எந்த பொருட்களை தவிர்க்க வேண்டும் என்று பார்ப்போம்

teeth

சில பல்வலி நேரத்தில் பொருட்களை உட்கொள்வதால், உங்கள் பிரச்சனை இரட்டிப்பாகும். பற்களில் வலி அல்லது பிற பிரச்சனைகள் இருந்தால், நீங்கள் என்னென்ன பொருட்களை உட்கொள்ளக்கூடாது,எந்த பொருட்களை எடுத்து கொள்ள வேண்டும்  என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

இனிப்பு பொருட்கள்:

பல்வலியின் போது தீபாவளிக்கு செய்த இனிப்புப் பொருட்களை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இவற்றில் குறிப்பாக இனிப்பு, டாஃபி, சாக்லேட் போன்றவற்றை மறந்தும் உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை உங்கள் பற்களின் வலியை அதிகரிக்கும் என்பதால் இவற்றை அவசியம் ஒதுக்கி வைக்க வேண்டும் என்று பல் மருத்துவர்கள் கூறுகின்றனர் .