கொய்யா மரத்தின் இலை எந்த நோயை குணமாக்கும் தெரியுமா ?

 
teeth

பொதுவாக பற்கள் சுத்தமின்மை காரணத்தினால், தாங்க முடியாத பல்வலி, ஈறுகள் வீக்கம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

1.சில பல்வலி பிரச்சனைகளுக்கு கிராம்பால் ஆன தைலத்தை பல்வலி உள்ள இடங்களில் பஞ்சில் நனைத்து சில துளிகளை இட உடனடி நிவாரணம் கிடைக்க வழியுள்ளது .

teeth
2.இந்த தாங்க முடியாத பல் வலிக்கு அருகம்புல் பல வகையான நோய்களுக்கு தீர்வாக இருக்கிறது.
3.அந்த அருகம்புல்லின் சில கற்றைகளை வாயில் போட்டு நன்றாக மென்று, அந்த சாறு பல்வலி உள்ள இடங்களில் படுமாறு செய்ய பல்வலி பத்தே நிமிடஙக்ளில் பறந்தே போய் விடும்
4.தூங்க முடியாமல் செய்யும் பல் வலிக்கு  சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் பெருங்காயத்தை எலுமிச்சம் பழச் சாற்றில் குழைத்து, பல்வலி உள்ள இடங்களில் தடவி வந்தால் வலி குறைந்து நிம்மதியாக தூங்கலாம் .
5.பொறுக்க முடியாத பல் வலிக்கு கொய்யா மரத்தின் இலை கொழுந்துகளை நன்றாக மென்று, அந்த இலைகளின் சாறு மற்றும் அதன் சக்கையை, பல்வலி உள்ள இடத்தில் சிறிது நேரம் ஒதுக்கிக் கொள்ள பத்தே நிமிடத்தில் எப்பேர்ப்பட்ட பல்வலியும் காணாமல் போகும்
6.பற்களில் சொத்தை ஏற்படாமல் இருக்க சர்க்கரை பொருள் அதிகமுள்ள உணவு களை உண்பதை தவிர்க்க வேண்டும்.
7.பற்களை எப்போதும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.மேலும் அடிக்கடி உப்பு போட்டு வெந்நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும் .இரவு நேரத்தில் பல் துலக்க வேண்டும் .