பஞ்சை பாலில் நனைத்து பல்லில் வைத்தால் என்னாகும் தெரியுமா ?

 
milk

பொதுவாக பல்வலி வந்து விட்டால் அதை யாராலும் தாங்கி கொள்ள முடியாது .தலைவலியும் ,பல்வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்று ஒரு சொல் வழக்கு உள்ளது ,அந்தளவுக்கு இந்த பல்வலி கடுமையான வலியை கொடுக்கும் .இந்த பல்வலிக்கு டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே எப்படி சிகிச்சை தரலாம் என்று பார்க்கலாம்

tooth

1.பல்வலிக்கு கிராம்பு சிறந்த சிகிச்சை முறை .இரண்டு கிராம்பை எடுத்து நசுக்கி ஆலிவ் ஆயிலில் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற விடுங்கள். பிறகு அந்த எண்ணெயை காட்டனில் நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் வைக்க வலி குறையும்.  

2.பல்வலிக்கு பச்சை பூண்டு நல்ல பலன் தரும் .சில பற்கள் பூண்டை எடுத்து நன்கு நசுக்கி அதனுடன் சிறிது உப்பு சேர்த்து குழைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் வைக்க ,சொத்தை பல் தொற்று நீங்கும் .

3.பல்வலிக்கு உப்பு நீர் சிறந்த சிகிச்சை முறை .ஒரு கிளாஸ் வெந்நீரில் அரை டீஸ்பூன் உப்பு சேர்த்துக் கலந்து அதை வாயில் ஊற்றி ஒரு நிமிடம் வரை அப்படியே வைத்திருங்கள்.

4.பல்வலிக்கு வெங்காயம் சிறந்த சிகிச்சை முறை .வெங்காய சாறுடன் ஒரு சிட்டிகை அளவு மஞ்சளும் ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்து காட்டனில் நனைத்து பல் வலி, பல் சொத்தை உள்ள இடத்தில் வைத்து சாறு இறங்கும்படி லேசாக அழுத்திப் பிடியுங்கள்.

5.பல்வலிக்கு பால் மூலம் சிகிச்சை தரலாம் .ஒரு சிறிய காட்டனை , பாலில் நனைத்து பல் வலி உள்ள இடத்தில் வைத்து அழுத்தி பிடித்து சிறிது நேரம் வைத்திருக்க பல்வலி குறையும் .