தூங்கி எந்திரிச்சதும் டீ , காபி குடிப்பீங்களா?அப்ப இது உங்களுக்குத்தான்

 
tea

டீ அல்லது காபிக்கு முன் தண்ணீர் குடிப்பது வயிற்றில் அமில அளவைக் குறைக்க உதவுவதோடு, வயிறு மற்றும் ஒட்டுமொத்த உடல்நலக் கேடுகளையும் குறைக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். தண்ணீர் குடிப்பதால் பற்களில் தேநீர் கறை படியாமல் பார்த்துக் கொள்ள முடிவதோடு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளும் குறைய ஆரம்பிக்கும். உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது முதல் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவது வரை நிறைய நன்மைகளைச் செய்கின்ற தண்ணீர் ஏன் காபி, டீ குடித்த பின் குடிக்கும்போது மட்டும் தீங்கு விளைவிக்கிறது. கொஞ்சம் விநோதமா இருக்கா...

ஏனெனில் காபி அல்லது டீ போன்ற சூடான பானங்களைக் குடித்தவுடன் குளிர்ச்சியான நீரைக் குடிக்குமபோது, வெப்பமும் குளிர்ச்சியும் வயிற்றுக்குள் இணையும் போது வயிறு சம்பந்தமான சில உபாதைகள் ஏற்படும்..

coffee

உண்மையில் காலையில், நம் வயிறு காலியாக இருக்கும் போது, நாம் என்ன சாப்பிட்டாலும், அது நேரடியாக நம் வயிற்றின் உள் அடுக்கை பாதிக்கிறது.

இதனால், வயிற்றில் எரிச்சல் உணர்வு, வயிற்று வலி, நெஞ்செரிச்சல், அஜீரணம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

தற்போது காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாத உணவுகள் என்னென்ன குறித்து இங்கே பார்ப்போம்.

நார்ச்சத்து வயிற்றுக்கு நல்லது. ஆனால் அளவுக்கு மிஞ்சிய வகையிலான அதிக நார்ச்சத்து வயிற்றுக்கு தீங்கு விளைவிக்கும். இது வயிற்று வலி போன்ற சிக்கலகளை ஏற்படுத்தும். எனவே, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சரியாக தேர்ந்தெடுத்து, சீரான வகையில், சரியான அளவில் உண்ணுங்கள்.

  காலையில் காரமான, மசாலா அதிகம் உள்ள மற்றும் பொரித்த உணவை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். ஏனெனில், இது வயிற்று எரிச்சல் மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தும். இதனுடன், நீங்கள் வயிறு மற்றும் மார்பு பகுதிகளில் நீங்கள் அசௌகரியத்தை உணரலாம். 

 காலையில் வெறும் வயிற்றில் தேநீர் மற்றும் காபி சாப்பிட்டால் அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இதனால் உங்களுக்கு நெஞ்செரிச்சல் மற்றும் நீர் சத்து இழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

 காலையில் வெறும் வயிற்றில் குளிர்சாதன பெட்டியில் இருந்து குளிர்ந்த நீரை ஒருபோதும் குடிக்கக்கூடாது. இதன் காரணமாக உங்கள் செரிமான சக்தி குறையத் தொடங்குகிறது.

 ஆல்கஹால் வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது. இது உங்கள் கல்லீரலில் அதிக அழுத்தம் ஏற்படுத்தும் என்பதோடு, ஆல்கஹால் உங்கள் இரத்தத்தில் மிக வேகமாக பரவுகிறது.