நோய்கள் குணமாக மாத்திரையை எப்படி சாப்பிடனும் தெரியுமா ?

 
tablet tablet

பொதுவாக நாம் நோய் வந்தால் மாத்திரை போட்டு கொள்கிரோம் அல்லது ஊசி போட்டு கொள்கிரோம் .ஆனால் நாம் நோய்க்கு எடுத்து கொள்ளும் மாத்திரையை எந்த திசையில் நின்றோ அல்லது எந்த முறையில் எடுத்து கொண்டாலோ நோய் விரைவில் குணமாகும் என்று இந்த பதிவில் பாக்கலாம் 

1.பொதுவாக நோய்க்கு நாம் சாப்பிடும் மாத்திரையை கீழே படுத்துக் கொண்டு அல்லது வலது புறமாக சாய்ந்து கொண்டு மாத்திரை போட்டால் அது கரையும் வேகம் 3 மடங்கு அதிகரிக்கிறதாம். 
2.அதாவது,நோய்க்கு நாம் சாப்பிடும் மாத்திரையை வலது பக்கம் சாய்ந்து மாத்திரை போடும்போது, அது பத்து நிமிடங்களில் கரைகிறது ., 
3.அதுவே நேராக நின்று கொண்டு நோய்க்கு நாம் சாப்பிடும் மாத்திரையை விழுங்கும்போது இருபத்தி மூன்று நிமிடங்களும், இடதுபுறமாக சாய்ந்து கொண்டு விழுங்கும்போது நூறு நிமிடங்களும் ஆகிறது.
4.எந்த நிலையில் மாத்திரை விழுங்குகிறோம் என்பது முக்கிய பங்கு வகிக்கும் என்பதே நாம் நம்புவதற்கு கடினமான விஷயமாக இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 
5.வயிற்றுக்குள் உணவு செரிக்கும் விதம், மருந்து செரிமானம் ஆகும் விதம் குறித்து ஆய்வு செய்து, மாத்திரை விழுங்குவதற்கான நிலையை டாக்டர்கள் கண்டறிந்துள்ளனர்.
6.பெரும்பாலான நோய்க்கு நாம் சாப்பிடும் மாத்திரை முழுவதுமாக கரைந்த பிறகு தான் வேலை செய்யும். 
7.நோய்க்கு நாம் சாப்பிடும் மாத்திரையை மாத்திரையின் மூலப் பொருள் குடல் பகுதியில் கலந்த உடன், அதன் விளைவை உடலில் பார்க்கலாம்.
 8.குறிப்பாக, வயிற்றின் அடிப்பகுதியான ஆண்ட்ரம் பகுதியை நோக்கி மாத்திரை சென்றால் மிக விரைவாக கரைந்து விடும். 
9.முதியவர்களுக்கு நிச்சயமாக இது உதவும். ஏனென்றால், அவர்களது உடல் மருந்துகளை உறிஞ்ச ஒத்துழைப்பு கொடுக்காது , 
10.சரியான நிலையில் மாத்திரை எடுத்துக் கொள்வது முதியோருக்கு உதவிகரமாக அமையும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர்