வெயிலை சமாளிக்க அடிக்கடி நீங்க இதையெல்லாம் செய்யுங்க

 
summer

பொதுவாக கோடை காலத்தில் நம் உடல் ஆரோக்கியத்தை பாதுக்காக்க ஆரோக்கியமான உணவுமுறை மிகவும் அவசியம்.இது பற்றி நாம் இப்பதிவில் பாக்கலாம்  
1.சுட்டெரிக்கும் வெயிலில் வெளியில் செல்லும்போது சருமத்தை பாதுகாக்க சன்ஸ்க்ரீம் பயன்படுத்துங்கள். அதே போல கொளுத்தும் வெயிலில் உடலை ஈர்ப்பத்ததுடன் வைத்திருக்க அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

summer
2.மோர், தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற உணவுகளை கோடை காலத்தில் உட்கொள்வது உங்கள் உடலை குளிர்ச்சிப்படுத்த உதவும்
3.இந்த கோடை காலத்தில் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு அதிகமாக வியர்க்கும் என்பதால் நன்மையே தவிர, அதில் எந்த தீமையும் இல்லை.
4.இருந்தாலும் அசுத்தங்கள் படிந்து நம் சருமத்தில் அலர்ஜி ஏற்படும் என்பதால் அடிக்கடி குளித்தல் நல்லது. முக்கியமாக வியர்வை உலர்ந்த பின்பு குளிக்க வேண்டும்.
5.கோடை காலத்தில் வெளியில் சுற்றி வேலை பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் டார்க் நிற உடைகளை தவிர்த்துவிடலாம்
6. கண்ணுக்கு உறுத்தாத வெளிர் நிற ஆடைகளை அணிவதால் வெயிலின் தாக்கத்திலிருந்து சிறிது தப்பிக்கலாம்.