வியர்க்குருவை விரட்ட வியக்க வைக்கும் வைத்தியம் .

 
summer

 

பொதுவாக இந்த கோடை காலத்தில் வெயிலில் அடிக்கடி செல்வோருக்கு வியர்க்குரு வர வாய்ப்புள்ளது ,அதன் காரணமாக சிலருக்கு ஸ்கின் அலர்ஜி உண்டாகும் .இந்த ஸ்கின் அலெர்ஜியிலிருந்து தப்பிக்க ஒரு எளிய குறிப்பொன்றை இந்த பதிவில் பார்க்கலாம்

 

1.ஒருவருக்கு இந்த கோடையில் வியர்க்குரு வந்தால் உடல் முழுவதும் அலர்ஜி போல் வந்து புண்களாக மாறி பார்ப்பதற்கு அவலட்சணமாக இருக்கும் .

summer

2.எனவே இந்த கொடுமையான வியர்குருவை விரட்ட உதவும் ஒரு வீட்டு வைத்தியம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

3.முதலில் வெள்ளரிக்காய் துண்டுகள் ஐந்து துண்டுகள் எடுத்து கொள்ளவும்

4.அதனுடன் கற்றாழை ஜெல் 3 டீஸ்பூன் எடுத்து வைத்து கொள்வோம் .அடுத்து இதை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்

5.முதலில் வெள்ளரிக்காய் தோல் நீக்கி அதை நன்றாக மசித்து ஒரு பாத்திரத்தில் எடுக்கவும்.

6.பின்னர் அந்த மசித்த வெள்ளரிக்காயுடன்  கற்றாழை ஜெல் கலந்து எடுத்து கொள்வோம்

7.பின்னர் இவையிரண்டையும் நன்றாக குழைத்து வியர்க்குரு இருக்கும் இடத்தில் படும்படி தேய்த்து கொள்ளவும்

8.உடலில் அதை பூசிவிட்டு 10 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்

9.பிறகு அந்த கலவையை மந்தமான நீரில் சுத்தம் செய்யவும்.

10.இதுபோல் தினமும் ஒரு வேளை செய்ய வியர்க்குரு மறைந்து விடும்