"வெயில் காலம் வந்தாலே தலைவலி வந்திடுதே" ன்னு தலையில் கை வச்சிக்கிட்டிருக்கிறவங்களுக்கு உதவும் டிப்ஸ்

 
head ache

கோடை காலம் தொடங்கி வெயில் கொளுத்தி வரும் நிலையில் பலருக்கும் தலைவலிதான் பெரிய தலைவலியாக இருக்கும். சாதாரண நாட்களை விட கோடை காலத்தில்தான் தலைவலிபோன்ற பிரச்சனைகலால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இதற்கு காரணம் தலையில் இருக்கக்கூடிய நரம்புகள் உடல் சூடு காரணமாக விரிவு பெற்று அருகில் உள்ள நரம்புகளை நெருக்கும்போது இந்த தலைவலி வருகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதற்கு ஒரே வழி உடலை குளுர்ச்சியாக வைத்துகொள்வதும், தாராளமாக தண்ணீர் குடிப்பதுமேயாகும்.

 இப்படி தலைவலி ஏற்பட பல காரணங்கள் உள்ளன. தலை வலி நீங்க சித்த மருத்துவம் கூற சில குறிப்புகளை இங்கு பார்ப்போம் வாருங்கள். 
 துளசி, சுக்கு போன்றவை இயற்க்கை நமக்கு தந்த வரப்ரசாத மூலிகைகள். இவைகள் மூலம் தலைவலியை எளிதில் குணப்படுத்தலாம். துளசி இலைகள் ஐந்து எடுத்துக்கொண்டு அதோடு ஒரு துண்டு சுக்கு மற்றும் இரண்டு லவங்கத்தை சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் தலைவலி இருக்கும் இடத்தில் பற்று போட்டால் தலைவலி விரைவில் நீங்கும்.
சிலருக்கு உடல் உஷ்ணத்தால் கூட தலைவரை ஏற்படும். அது போன்ற சமயங்களில் சீரகம் மற்றும் கிராம்பை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து அந்த நீரை பருகி வந்தால் சூட்டல் ஏற்பட்ட தலைவலி நீங்கும்

Head ache(thalaivali)

உங்களுக்கு தலைவலி வருகிறது என்றால் முதலில் நீங்கள் தேட வேண்டியது வலி நிவாரணியாக உள்ள மாத்திரைகளையோ அல்லது தலைவலி தைலங்களையோ அல்ல... ஒரு டம்ளர் தண்ணீரை முதலில் குடியுங்கள். அது மட்டும் இன்றி வெயில்காலங்களில் அதிகம் தலைவலி ஏற்படக்கூடிய நபர்கள் டீ, காப்பி உள்ளிட்டவைகளை முற்றிலுமாக குறைத்தால் அது மிகவும் சிறந்த பலனை அளிக்கும். இதுபோன்ற பானங்கள் உடலில் உள்ள நீர் சத்தை முற்றிலுமாக குறைத்து தலைவலி ஏற்பட ஊக்கம் அளிக்கும்.

அதேபோல், இரவு நேரங்களில் தூக்கத்தை தவிற்து மொபைல் ஃபோன் பயன்படுத்துவதை தவிருங்கள். நிம்மதியான உறக்கம், சத்தான உணவு, போதுமான அளவு குடிநீர் இதுவே உங்கள் ஆரோக்கியமான வாழ்கையின் மத்திர செயல்களாக இருக்கும். இந்த வெயில் காலத்தில் நீங்கள் வெளியில் செல்வதை முடிந்த வரை தவிற்கலாம். அப்படி செல்ல வேண்டும் என்றால் கையில் தண்ணீர் பாட்டில் மற்றும் குடை வைத்திருப்பது அவசியம்