சுக்குக்குள் இவ்ளோ சூப்பர் பவர் அடங்கியிருக்கா ?

 
stomach

சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை என்று இன்றும் கிராமங்களில் ஒரு சொல் வழக்கு உள்ளது .அந்தளவுக்கு சித்த வைத்தியத்தில் சுக்கு பயன்படுகிறது .காலையில் இஞ்சி  ,மதியம் கடுக்காய் மாலை சுக்கு என்று நாம் உணவில் சேர்த்து வந்தால் வைத்தியர் வீட்டுக்கே போக வேணாம் .வாதம், முடக்குவாதம், குதிகால் வாதம் போன்ற பிரச்சனைகளுக்கு சுக்கு சிறந்த வைத்தியமாக பயன் படுகிறது .சுக்கு இப்போதெல்லாம் நாட்டு மருந்து கடைகளில் ரெடிமேடாக கிடைக்கிறது .இல்லையெனில் வீட்டிலேயே மா இஞ்சியை காய வைத்து சுக்கு தயாரிக்கலாம்

sukku

 காரம், மணம் நிறைந்த சுக்கு, உடம்பில் சூட்டை ஏற்படுத்தும். அதே வேளையில் பசியைத் தூண்டுவதோடு இரைப்பை வாயுத் தொல்லையை போக்க பயன் படுகிறது .

சிலருக்கு தீராத தலை வலி இருக்கும் .இந்த தலைவலிக்கு சுக்கை நீர் விட்டு அரைத்தோ, உரசியோ (இழைத்து) நெற்றியில் பூசினால், அடுத்த சில நிமிடங்களில் சிறந்த  பலன் கிடைக்கும். மேலும் தண்ணீருக்குப் பதிலாக பால் விட்டு அரைத்தும் பயன்படுத்தி வந்தால் பலன் கிடைக்கும்

தலை வலி இருக்கும் இடங்களில் சுக்கை தேய்த்தால் இதமாக இருக்கும். வலி விலகியதும் எரிச்சலை ஏற்படுத்தும். அப்படியானால் தலைவலி சரியாயிற்று என்று அர்த்தம். உடனே ஒரு துணியால் நெற்றிப் பற்றை துடைத்தோ, கழுவியோ விடலாம்.

சிலருக்கு வயிறு பிரச்சினை இருக்கும் .அதன் காரணமாக வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, விலாப்பகுதியில் ஏற்படும் குத்தல், குடைச்சல், புளித்த ஏப்பம், அஜீரணக்கோளாறு, மார்பில் எரிச்சல், மூக்கடைப்பு, ஜலதோஷம், காதில் குத்தல் வலி, நாக்கு சுவையின்மை மற்றும் மூட்டுக்களில் வலி போன்ற தொல்லைகள் தொடர்ந்து இருக்கும் .இது ஏற்படும் நேரங்களிலும் இந்த சுக்கு கைகொடுக்கும்.