சர்க்கரை நோயால் தவிப்பவர்கள் இவற்றை தவிர்த்தால் லேப் ,டெஸ்ட்டுன்னு அலையவேணாம்

 
sugar

பொதுவாக சர்க்கரை நோயில் இரண்டு வகைகள் இருக்கின்றன .அவை டைப்  1 மற்றும் டைப்  2ஆகும் .இதில் இந்தியாவில் பெரும்பாலோனோரை பாதிப்பது டைப் 2 வகை சர்க்கரை நோய்த்தான் .இந்த பாதிப்பில் உலகளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது .இந்த வகை சர்க்கரை நோய் வயதான நபர்களைத்தான் அதிகம் தாக்கும் ,ஆனால் சமீப காலமாக இளம் வயதினரையும் இந்த வகை சர்க்கரை நோய் அட்டாக் செய்கிறது

sugar

எனவே சர்க்கரை நோயாளிகள் மேலும் நோய் முற்றாமலிருக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்

மைதாவால் தயாரிக்கப்பட்ட பரோட்டா ,பிஸ்கட் போன்ற உணவுகளையும் .எண்ணெயில் பொறித்த உணவுகளையும் சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும் .மேலும் ஐஸ் க்ரீம் மற்றும் சாக்லேட்டையும் ,க்ளுக்கோஸ் அளவை அதிகரிக்கும் காபி டீ போன்றவைகளை சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும் .

மேலும் சுங்கர் பேஷண்டுகளுக்கு ஆபத்தை தரும் கிழங்கு வகைகளில் சேப்பங்கிழங்கு, உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரை வள்ளி கிழங்கு போன்ற கிழங்குகளை அவசியம் தவிர்க்க வேண்டும்.

கரும்புச்சாறு, சர்க்கரை, பன்னீர் (பால் கட்டி), மாம்பழம், சீத்தாப்பழம், பலாப்பழம், வாழைப்பழம், குளுக்கோஸ், உலர்ந்த திராட்சை போன்ற உணவுகளை சுகர் பேஷண்டுகள் தவிர்த்தால் நலம்