சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் இந்த கீரை கட்டுக்கள்

 
diabetes

சர்க்கரை நோய் என்றால் உங்கள் உடலில் இயல்பை விட சர்க்கரை அளவு அதிகமாக இருந்து கொண்டு அது பல விதமான உடல் உபாதைகளை கொடுப்பதாக அர்த்தம் .மேலும் இந்த சர்க்கரை அளவை நீங்கள் உண்ணும் கீரைகள் மற்றும் உணவின் மூலமாகவே கட்டுக்குள் வைக்கலாம் .மேலும் பாலீஷ் செய்யப்பட்ட அரிசி உணவுகள், மைதா உள்ளிட்ட உணவுகள் ரத்தத்தில் கார்போஹைட்ரேட் அளவை உடனடியாக அதிகரிக்கச் செய்துவிடும்.எனவே எந்த கீரைகள் சுகரை குரைக்கும் என்று பின்வரும் குறிப்பை படித்து அதன்படி சாப்பிட்டு பலன் பெறுங்கள்

Diabetes | Type 1 Diabetes | Type 2 Diabetes | MedlinePlus

அரைக்கீரை, கறிவேப்பிலை, புதினா கீரை, முசுமுசுக்கைகீரை, வல்லாரை கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, முருங்கை கீரை, சிறுகீரை, மணத்தக்காளி கீரை, துத்தி கீரை ஆகிய இந்த கீரை யில் தினம் ஒரு கீரை என்று பட்டியல் போட்டு அதை கடைந்தும் அல்லது சமைத்தும் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலில் சுகர் அளவு நார்மலாக இருக்கும்

சக்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்கள்:

 சக்கரை நோயாளிகள் சில பழவகைகளை சாப்பிடலாம். அப்படி அவர்கள் சாப்பிட வேண்டிய சில பழ வகைகள் இதோ. நாவல்பழம், நெல்லிக்காய் ஆகியவற்றை வேண்டிய அளவு சாப்பிடலாம். மலைவாழை வாரத்திற்கு இரண்டு சாப்பிடலாம். தினம் மூன்று பேரிச்சம்பழம் சாப்பிடலாம். கொய்யா காய் சாப்பிடலாம். பப்பாளி, ஆப்பிள், விளாம்பழம் போன்றவற்றை ஒரு நாளைக்கு 50 கிராம் அளவு சாப்பிடலாம்.இப்படி சாப்பிட்டு வந்தால் சுகர் அளவு நார்மலாக இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்