நீரழிவு நோயாளிகள் வெறும் வயிற்றில் இந்த தண்ணீர் குடித்து வந்தால் சுகரை விரட்டலாம் தெரியுமா ?

 
water

பொதுவாக சீரகம் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது .இந்த சீரகத்தை கலந்த தண்ணீரை குடிப்பதால் நம் உடல் நலனில் நல்ல முன்னேற்றம் காணப்படும் .எனவே இந்த சீரக தண்ணீரில் நிறைந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து நாம் இந்த பதிவில் காணலாம் 

1.சீரக தண்ணீர் குடிப்பதனால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து கிருமிகளிடம் இருந்து உடலை பாதுகாக்கும். 2.சீரக தண்ணீரில் அதிக அளவு இரும்பு சத்து மற்றும் நார் சத்துகள் உள்ளன.
3.நீரழிவு நோயாளிகள்  வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடித்து வந்தால், உங்கள் இரத்த சர்க்கரை அளவை குறைய செய்யும்.
4. சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்த தண்ணீரை தினமும் குடித்து வந்தால் பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.
5.சீரகத்தில் பொட்டாசியம், கால்சியம், செலினியம், காப்பர், மெக்னீசியம் போன்ற உயிர்ச்சத்துகள் உள்ளது. இவை உடலுக்கு தேவையான நன்மைகளை வழங்குகிறது.
6.சீரக தண்ணீரில் அமிலத்தன்மை, குமட்டல், அஜீரண கோளாறுகள் ஆகிய பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு  மிகவும் நல்லது. 
7.சீரக தண்ணீரில் வயிறு வலியை குணமாக்கும் ஆற்றல் உள்ளது .
8.சோர்வாக இருக்கும் சூழலில் சீரக தண்ணீர் குடித்து வந்தால் மிகவும் நல்லது. 
9.சீரக தண்ணீரின் மூலம்  உடல் ஆற்றல் மேம்படும் மற்றும் ஆரோக்கியமாக இருக்கலாம்.
10.சில தாய்மார்களுக்கு குழந்தை பிறந்ததும் தங்கள் பால் சுரப்பிகளில் இருந்து பால் சுரக்க சீரக தண்ணீர் அருந்தலாம்.