ஆவாரம் பூவை சாப்பிட எந்த நோய் குணமாகும் தெரியுமா ?
பொதுவாக மோசமான உணவு பழக்கம் ,மற்றும் பரம்பரை காரணமாக பலருக்கு சர்க்கரை நோய் உண்டாகிறது .சுகர் அளவு 300 ,400 என்று அதிகமாகி விட்டால் சில ஆயுர்வேத வழிகளை பார்க்கலாம்
1.சுகர் அளவு ஏறாமல் இருக்க வாழைக்காய், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு ஆகிய காய்கறிகளை ஏறெடுத்து பார்க்காமல் இருப்பது நலம்
2.சுகர் பேஷண்டுகள் சப்போட்டா, பலாப்பழம், மாம்பழம் ஆகிய பழ வகைகளை சேர்க்காமல் இருப்பது நலம் ..
3.இது தவிர அதிக இனிப்புள்ள பழங்களையும் சேர்க்காமல் இருக்க வேண்டும் .
4.சுகர் அளவு கூடாமல் இருக்க ஆவாரம் பூவை கூட்டு அல்லது பொரியலாக செய்து சாப்பிடலாம்.
5.அல்லது அந்த பூக்களை வேகவைத்து அந்த நீரை தேநீருக்கு பதிலாக பருகலாம்.
6.அது போல தினமும் 100மி.லி அளவு அருகம்புல் சாறை அருந்தலாம் அல்லது கொத்தமல்லி சாறு, நெல்லிக்காய் சாறு, கறிவேப்பில்லை சாறு போன்றவற்றில் ஏதோ ஒன்றை அருந்தலாம்
7.இவற்றை தினமும் 100மி.லி அளவு அருந்தி வந்தால் சர்க்கரை நோய் அளவு 200-300-400 என்று ஏறாமல் உங்கள் உடல் நலம் பாதுகாக்கப்படும் .