சுகர் பேஷன்டின் சுகரை குறைக்க உதவும் இந்த ஜூஸ்

 
amla

1.நீரிழிவு நோயாளிகளுக்கு நெல்லிக்காய் ஜூஸ் மிகவும் நல்லது.

2.இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படும் நோய்தான் நீரிழிவு நோய்.

3.இது வந்தால் பெரும்பாலும் உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள சிகிச்சையும் எடுப்பது வழக்கம்.

amla

4.அப்படி நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது மட்டுமில்லாமல் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை கொடுத்து ஒரு சிறந்த மருந்தாக இருக்கிறது.

5.நெல்லிக்காய் ஜூஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்..

6.இரண்டு நெல்லிக்காயை கழுவி அதில் உள்ள விதைகளை வெட்டி நீக்கிவிட வேண்டும் பிறகு மிக்ஸியில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி குடித்து வர வேண்டும். இது வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இன்னும் சிறந்தது.

7.மேலும் ரத்தத்தில் உள்ள நல்ல கொழுப்பை அதிகரித்து கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. இது மட்டும் இல்லாமல் இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.