வெந்தயத்தை வறுத்து தூள் செய்து மோரில் கலந்து குடித்து வர எந்த நோய் விலகும் தெரியுமா ?
பொதுவாக உடலில் சிறு தொல்லை ஏற்பட்டாலும் அதற்கு ஸ்கேன் ,ஈசிஜி எடுக்கிற காலம் இது ,ஆனால் நம் முன்னோர் பல்வேறு நோய்களுக்கு வீட்டு வைத்தியத்திலேயே செலவில்லாமல் குணப்படுத்தி விட்டனர் ,அந்த முறை பற்றி இந்த பதிவில் பாக்கலாம்
1.சிலருக்கு சளி தொல்லையிருக்கும் .அவர்கள் தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து பின் ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
2.சிலருக்கு தீராத தலைவலியிருக்கும் .அதற்கு கொஞ்சம் துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
3.சிலருக்கு தொண்டை கரகரப்பு இருக்கும் .அதற்கு சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
4.சிலருக்கு விக்கல் விடாமல் வரும். நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் கலந்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
5.சிலருக்கு அஜீரண கோளாறு இருக்கும் .ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
6.சிலருக்கு உடல் உஷ்ணம் இருக்கும் .அதற்கு ஜீரகத்தை தண்ணீரில் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து பின் அந்த நீரை வடிகட்டி குடித்து வர உடல் சூடு தணிந்து உடல் குளிர்ச்சியடையும்.
7.சிலருக்கு வாயுதொல்லை இருக்கும் .அதற்கு வேப்பம் பூவை காயவைத்து நைசாக அரைத்து வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் வாயுதொல்லை நீங்கும். .
8.சிலருக்கு வயிற்றுவலி இருக்கும் .அதற்கு வெந்தயத்தை லேசாக வறுத்து தூள் செய்து மோரில் கலந்து குடித்து வர தீராத வயிற்றுவலி குணமடையும்.
9.சிலருக்கு தோல் நோய் இருக்கும் .அதற்கு ஆரஞ்சுபழ தோலை நிழலில் உணர்த்தி காயவைத்து பொடி செய்து ,தேய்த்து குளித்து வந்தால் சரும நோய் விரைவில் குணமடையும்.
10.சிலருக்கு மூக்கடைப்பு இருக்கும் .அதற்கு ஒரு துண்டு மஞ்சளை விளக்கில் சுட்டு அதன் புகையை மூக்கால் நுகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கி சுவாசம் புத்துணர்வு பெரும்.



