ஒரு சொம்பு சோம்பு தண்ணீரில் இவ்ளோ நன்மையிருக்கா ?
முதல் நாள் இரவு சோம்பை தண்ணீரில் ஊறவைத்து விட்டு அந்த தண்ணீரை மறு நாள் காலையில் குடித்தால் எடையை குறைக்க விரும்புவோருக்கும் ,வயிறு பிரச்சசினை உள்ளோருக்கும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் .மேலும் அது பசி எடுப்பதை கட்டுப்படுத்துவதால் நாம் அதிகமாக சாப்பிடமாட்டோம் .இதனால் தானாக எடை குறையும் .மேலும் சோம்பு தண்னீர் மற்றும் சோம்பு டீ மூலம் நமக்கு கிடைக்கவும் நண்மைகள் பற்றி பார்க்கலாம்

ஒரு சொம்பு சோம்பு தண்ணீர் உடலின் வளர்சிதை மாற்றத்தை சரிசெய்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புகளைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது .மேலும் அது ஈரல் நோயைக் குணப்படுத்த இந்த சோம்பும் ஒரு மருந்தாகப் பயன்படுகிறது என சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர் .
சிலருக்கு வயிற்றை சுற்றியுள்ள தேவையற்ற சதைப் பகுதி அதிகமாக இருந்து தொல்லை கொடுக்கும் அந்த சதைகள் சோம்பு மூலம் கரையும்.அதிக தொப்பை கரைந்து சரியான கச்சிதமான உடல் அமைப்பை தரும்.
சோம்புத் தண்ணீர் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, ரத்தத்தைச் சுத்தப்படுத்தி ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் வல்லமை கொண்டது
சோம்புத் தண்ணீர் குடித்து வந்தால், மூளை சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடனும் செயல்படும்.
தூக்கத்தைச் சீராக்கும். சோம்புத் தண்ணீர் மூளையில் பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் மெலடோனின் எனப்படும் நேச்சுரல் ஹார்மோனை சீராக உற்பத்தி செய்து, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் கொடுத்து ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிவகுக்கும்.
சில பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் அதிக வலி இருக்கும் .அப்படி ஏற்படக்கூடிய வயிற்றுவலிக்குச் சோம்புத் தண்ணீர் நிவாரணம் தந்து அந்த மூன்று நாட்களை நிம்மதியாக கழிக்க செய்யும்


