பாம்புக்கடி முதல் தேள் கடி வரை குணமாக்கும் இந்த செடி

 
snake

பொதுவாக விஷக்கடிக்கு சிறியா நங்கை செடிகள் நமக்கு அரு மருந்தாக இருக்கும் .அந்த காலத்தில் காட்டுக்குள் வேட்டைக்கு செல்லும் வேடர்கள் சிறியா நங்கை செடியின் வேரை வாயில் வைத்து கடித்து கொண்டு செல்வார்கள் ,அப்போது காட்டில் பாம்பு முதல் வேறு விஷ பூச்சிகள் கடித்தால் அந்த விஷம் அவர்கள் உடம்பில் ஏறாமல் அவர்களை காக்கும் .அந்த செடியின் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

snake bite

1.சிலரை பாம்புகள் கடித்து விட்டால் இன்றும் கிராமப்புறங்களில் ஆங்கில வைத்திதிற்கு செல்ல மாட்டார்கள் .அதற்கு பதிலாக பாம்புக்கடி, தேள் கடி முதலிய விஷக்

கடிகளுக்கு சிறியாநங்கை இலையை அரைத்து

விழுங்கச் சொல்வார்கள். இதன் மூலம் விஷம் இரங்கி உடல் ஆரோக்கியம் பிறக்கும்

2.மேலும் இந்த சிறியா நங்கை மூலம் இதனால் ரத்தத்திலுள்ள

விஷத்தன்மை நீங்கும்.கீரிகள் கூட பாம்புடன் சண்டையிட்ட பின் இந்த செடியில் விழுந்து புரண்டு விஷத்தை முறிக்கும்

3.மேலும் உடலில் வீக்கம் இருந்தால் சிறியாநங்கை இலைகளை, எலுமிச்சை

சாறு விட்டு நன்கு அரைத்து வீக்கம் மேல்

பற்றுப் போட்டு வந்தால் வீக்கம் குறையும்.

4.அது மட்டுமில்லை விஷக்கடிக்கு மட்டுமல்லாமல் நீரிழிவு நோய்க்கும், அலர்ஜிக்கும் சிறியா

நங்கையைப் பயன்படுத்துகிறார்கள்.