தூக்கம் வராமல் தவிப்போருக்கு உதவும் இந்த தூக்க டிப்ஸ்
பொதுவாக தூக்கமின்மை பிரச்சினை நம் நாட்டில் நிறைய பேருக்கு இருக்கிறது .பலர் தூக்கமாத்திரை சாப்பிட்டால்தான் தூங்க முடியும் என்ற நிலையில் உள்ளனர் .இந்த பிரச்சினை தீரவும் ,சுகமான தூக்கம் வரவும் சில வழிகளை குறிப்பிட்டுள்ளோம் .

1. சிலர் வடக்கிலும், தெற்க்கிலும் தலை வைத்துப் படுப்பர் . அப்படி தலை வைத்தால் நமது மூளை பாதிக்கப்படும்.
2. சிலர் தூங்கும் சமயத்தில் டீ, காபி,சாப்பிடுவர் .அது கூடாது மேலும் புகையிலை, சிகரெட் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.
3. சிலர் வெறும் தரையில் படுத்து உறங்குவர் . அப்படி தூங்காமல் துணி அல்லது பாயை போட்டு படுக்க வேண்டும்.
4. இரவு தூங்குவதற்கு முன்னாள் நன்கு பற்களை துலக்கி விட்டுத் தூங்குவது பல் ஆரோக்கியம் சிறக்கும்
5. சிலர் தூங்கும் சமயத்தில் கொசுவர்த்திகளை கொளுத்துவர் .அப்படி பயன்படுத்த கூடாது.
6. சிலர் ரூமை அடைத்து வைத்து தூங்குவர் .நாம் தூங்கும் இடம் காற்றோட்டமாக இருப்பது அவசியம். .
7. இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிறு குளியல் போட்டால் நல்லது . உடல் புத்துணர்ச்சி அடைந்து அது நிம்மதியான உறக்கத்திற்கு வழி வகுக்கும்.
8. தூங்குவதற்கு முன் சிறு மூச்சுபயிற்சி, நடைபயிற்சி போன்றவற்றை மேற்கொண்டாலும் நிம்மதியான உறக்கம் கிடைக்கும்.
9. தூங்குவதற்கு அரைமணி நேரம் முன்பே நாம் செல்போனை அணைத்து விட வேண்டும்.


