தோல் பிரச்சினை வராமல் வெயில் காலத்தில் வாழ்வது எப்படி ?

 
pepper

பொதுவாக கோடை காலத்தில் பலருக்கும் தோல் நோய்கள் உண்டாகும் .இதை எப்படி வராமல் தடுக்கலாம்

சில உணவுப் பொருட்களை அன்றாட உணவில் தவிர்க்காமல் சேர்த்துக் கொண்டால் தோல் அழற்சிக்கு ஈஸியாக நிவாரணம் தேடலாம்.

1.அழற்சி எதிர்ப்பு பண்புகளை அதிகம் கொண்டிருக்கும் பொருட்களில் இஞ்சிக்கு முதன்மையான இடமுண்டு.

Ginger

2.மிளகில் உள்ள பைபரின், நம் உடலில் ஏற்படும் தோல் வியாதி உள்ளவர்களுக்கு இது நிச்சயம் உபயோகமாக இருக்கும். 

3.மஞ்சள் தூள் பற்றி கூறவே தேவையில்லை.  அதில் உள்ள முக்கிய ஆக்ஸிஜனேற்றியான குர்க்குமின் (curcumin), சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

4.துளசியில் அதிக நன்மைகள் உண்டு என்று அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் நமது சருமத்தை பொலிவாக்கவும் இது உதவுகிறது. .

5. தோல் சிவப்பாவதும், எரிச்சலும், தோல் சுருக்கத்தையும் குறைக்க துளசி உதவும். பங்கஸ் ( fungs) தொற்று மற்றும் பாக்ட்ரீயா ஆகியவற்றிற்கு எதிரான பண்புகளை துளசி வழங்குகிறது.

6.நாட்டு மருத்துவம், மூலிகை மருத்துவம் மற்றும் டயட்ரி சப்ளிமெண்ட்களில் அஸ்வகந்தா வேர்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த மூலிகை உடலின் நோயெதிர்ப்பு செல்களை மேம்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

7.இது தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் வெள்ளை அணுக்களை மேம்படுத்துகிறது என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.