ஏழே நாளில் சிகப்பழகுன்னு சொன்ன க்ரீமால் ஏமாந்தவர்களுக்கு, சிகப்பாய் மாற இயற்கை முறை

 
beati

ஏழே நாளில் சிகப்பழகு என்று பல க்ரீம்கள் விற்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த க்ரீம்களை ஏழு வருடங்கள் உபயோகித்தால் கூட சிவப்பழகு வருவதில்லை. இந்த நிலையில் இயற்கை வழியில் சிகப்பழகு பெற என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போமா?

பளபள’ன்னு இருக்க பளபளக்கும் பியூட்டி டிப்ஸ்.!

வெந்தய பொடியை தயிர் சேர்த்து பேஸ்ட் மாதிரி செய்து முகம் முழுவதும் தடவ வேண்டும். பின்னர் சிறிது நேரம் ஊறிய பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் கருத்திருந்த முகம், இயற்கையாக மாறி விடும். முயற்சித்து பாருங்களேன்

தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.
 

பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.
 
ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.
 


தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
 

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.
 

ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.