ஒரு துண்டு சித்தரத்தையை வாயில் போட்டு மென்றால் எந்த பிரச்சினை சரியாகும் தெரியுமா ?

 
siththarathai siththarathai

நம் முன்னோர்கள் சாப்பிட்ட மூலிகைகள் அனைத்தும் நமக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுப்பன .அந்த வகையில் பார்ப்பதற்கு இஞ்சி போல இருக்கும் சித்தரத்தையில் ஏராளமான மருத்துவ குணம் உள்ளது .இதன் மூலம் காய்ச்சல் ,இருமல் ,சளி தொல்லைகளை குணப்படுத்தலாம்.மேலும் மூட்டு வலி ,கால்வலி ,உடல் உஷ்ணம் ,மூச்சு திணறல் ,ரத்த உற்பத்தி போன்ற நோய்களுக்கு இந்த சித்தரத்தை பயன் படும் ,மேலும் இதன் ஆரோக்கிய நண்மைகள் பற்றி பார்க்கலாம் 

1.சிலருக்கு உடலில் அதிக நோய் இருக்கும் .சித்தரத்தை உடலில் உள்ள உடல் உபாதைகளைக் குணமாக்கும்.

2.சிலருக்கு வாந்தி உணர்வு எப்போதும் இருக்கும் .காலை எழுந்ததும் வரக்கூடிய குமட்டல், வாந்தி, தலை சுற்றல் போன்றவற்றை குணமாக்கும்.

3.காலை எழுந்தவுடன் ஒரு துண்டு சித்தரத்தையை வாயில் போட்டு மென்றால் பல பிரச்சினைகள் நீங்கும்.

4.நோய் எதிர்ப்பு சக்திஇல்லாமல் சிலர் இருப்பர் . இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகப்படுத்துகின்றது.

5.சிலருக்கு ஜுரம் அடிக்கடி வரும் .இந்த காய்ச்சலைக் குணப்படுத்த உதவுகின்றது. பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்புத் தன்மை காய்ச்சலை குறைக்க பயன்படுகின்றது