சர்க்கரை நோயை தவிடு பொடியாக்கும் சீந்தில் பொடி பத்தி தெரிஞ்சிக்கோங்க

 
seenthil seenthil

சீந்தில் முழுத்தாவரம் கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. பேதி, வெள்ளை படுதல், ஆகியவை குணமாகும். கிழங்கு, மேகம், காய்ச்சல், கழிச்சல், மாந்தம், விஷக்கடிகள் ஆகியவற்றைக் குணமாக்கும். இலை, தண்டு உடல் பலத்தை அதிகரிக்கும். சிறுநீர் பெருக்கும். முறைக் காய்ச்சல் தீர்க்கும். செரித்தல் குணமாகும்; வாதநோய்கள், கிரந்தி முதலியவை கட்டுப்படும். 

சிறுநீரக செயல் இழப்பு, ஆண்மைத்தன்மை குன்றுதல், கல்லீரல் கோளாறு ஆகிய நோய்களுக்கு கொடுக்கப்படுகிறது. மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறுகள், நாள்பட்ட காய்ச்சல் மற்றும் சீதபேதியை குணமாக்கும். வெட்டை நோயை விரட்டும். இந்திரியம் தானாக வெளியேறுவதை தடுக்கும்.

அமிர்தவல்லி எனும் சீந்தில் கொடியிலிருந்து எடுக்கப்படும் சீந்தில் சர்க்கரையை உண்டு வந்தால் கை, கால்கள் மரத்துப் போவது போன்ற சின்ன பிரச்னைகள் முதல் பால்வினை நோயினால் ஏற்பட்ட துன்பங்கள் வரை விடுதலை கிடைக்கும்.

சீந்தில் கொடி மருத்துவ பயன்கள் - Medicinal benefits | பெமினா தமிழ்

சீந்தில் மருந்தாகிப் பயன்தரும் விதம்

சீந்தில் கொடியிலிருந்து இலைகளைப் பிரித்து நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். உலர்ந்த இலைகளைப் பொடித்து வைத்துக்கொண்டு நீரில் கலந்து ஒரு தேக்கரண்டி அளவு காலை, மாலை இரண்டு வேளையும் குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.

சீந்தில் தண்டுகளைக் காய வைத்து ஒரு தேக்கரண்டி பொடியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியை நான்கு டம்ளர் நீர் விட்டு காய்ச்ச வேண்டும். ஒரு டம்ளர் அளவாக சுண்டிய பிறகு காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பசியின்மை, வயிற்றுவலி, செரிமானமின்மை ஆகிய துன்பங்கள் விலகும். காய்ச்சலுக்கும் இது நல்ல மருந்து.

சீந்தில் சர்க்கரை தயார் செய்யும் விதம்:

சீந்தில் கொடியை இடித்து குளிர்ந்த நீர் விட்டு ஊற வைக்க வேண்டும். மறுநாள் நன்றாகக் கடைந்து திப்பியை நீக்கிவிட்டு நீரை மட்டும் வெயிலில் வைத்திருந்தால் நீர் தெளிந்துவரும். அந்த தெளிந்த நீரை வடிகட்டிவிட்டு புதிதாக தண்ணீர் சேர்த்து கலக்கி வெயிலில் சுண்ட வைக்க வேண்டும். இப்படி பலமுறை செய்வதால் வெண்மையான மாவு போன்ற பொருள் நமக்குக் கிடைக்கும். இதுவே சீந்தில் சர்க்கரை எனப்படும்.

இந்த சீந்தில் சர்க்கரையை ஒரு கிராம் முதல் நான்கு கிராம் வரையில் வாயிலிட்டு நீர் அருந்துவதால் கடும் ஜுரத்துக்கு பின் ஏற்படும் உடல் இளைப்பு, மண்ணீரல் வீக்கம், இருமல், மூர்ச்சை, வாந்தி, ஆஸ்துமா ஆகியன குணமாகும். மேலும் இதனால் நாட்பட்ட சிறுநீர்ப்பை நோய்களுக்கும் தீர்வு கிடைக்கும். தாய்ப்பாலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தவும் உதவுகிறது. கல்லீரல், மண்ணீரல் ஆகியவை சீந்தில் சர்க்கரை சாப்பிட உறுதியாகும். உடல் எடை, உறுதி அதிகமாகும். பிற மருந்துகளுடன் சீந்தில் சர்க்கரை சிறிதளவு சேர்த்துக் கொடுக்க பலவகையான நோய்களும் விரைவில் குணமாகும்.