ரோஜாப்பூவின் இதழ்களை அதிகமாக சாப்பிடுவதால் எத்தனை நோயின் வலையில் விழாமல் காக்கும் தெரியுமா ?

 
health tips of roja flower health tips of roja flower

பொதுவாக ரோஜாப்பூக்களில் மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. இந்த ரோஜாப்பூ மூலம் ஆயுர்வேதம் சில மருந்துகளை தயாரித்து சில நோய்களை குணப்படுத்தி வருகின்றனர் 
இந்த ரோஜாவில் பன்னீர் ரோஜா வகைகள் மற்றும் பெங்களூர் ரோஜா வகைகள் உள்ளன .இனி இந்த பதிவில் ரோஜா மூலம் குணமாகும் நோய்கள் பற்றி நாம் பார்க்கலாம்  

1.பொதுவாக பன்னீர் ரோஜா வகைகள் மற்றும் பெங்களூர் ரோஜா ,இந்த இரண்டு ரோஜா வகைகளும் மருத்துவ குணங்கள் நிறைந்தன.
2.ஆரோக்கியம் நிறைந்த ரோஜாப்பூவின் இதழ்களை அதிகமாக சாப்பிடுவதால் உடலில் உள்ள வளர்ச்சிதை மாற்றம் அதிகரிக்கிறது.
3.மேலும் ,அடிக்கடி ஆரோக்கியம் உள்ள  ரோஜாப்பூவை சாப்பிடுவதால் நாம் உடலில் உள்ள நச்சுத்தன்மை வாய்ந்த கழிவுகள் வெளியேறி நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன .
4.நாம் ஆரோக்கியம் தரும் ரோஜாப்பூவின் இதழ்களை வெறுமனே சாப்பிடலாம்.
5.மேலும் நாம் ரோஜாப்பூவின் இதழ்களை காயவைத்து அதில் தேன் கலந்து சாப்பிடலாம். 
6.இதை ஆயுர்வேத மருத்துவத்தில் குல்கந்த் எனக்கூறுவர்கள், இது கடைகளிலும் விற்கப்படுகின்றன.  
7.மேலும் ரோஜாவின் இதழ்களை வெயிலில் காயவைத்து அரைத்து அதில் சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து உடலில் தேய்த்துக்கொள்ள சரும நோய்கள் அண்டாது 
8.மேலும் இந்த ரோஜாப்பூவில்  பால் மற்றும் தண்ணீர் கலந்து ஃபேஸ் பேக்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
9.மேலும் வாரம் 2 முறை இந்த ரோஜா பூவை  பயன்படுத்தினால் தோல் பளபளப்படையும் மற்றும் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.