சர்க்கரை நோயை குறைக்க சோறு எப்படி சாப்பிடணும் தெரியுமா ?

 
kuruna rice

நம் உடலில் சர்க்கரை தேங்குவதும் ,இன்சுலின் குறைவாக சுரப்பதும்தான் ஒருவர் சுகர் பேஷண்டாக மாறுவதற்கு மூல காரணம் .நாம் எப்போதாவதுதான் இனிப்பு வகைகளை சாப்பிடுகிறவம் .ஆனால் மாவு பொருட்களை தினம் தோறும் மூன்று வேலையும் சாப்பிடுகிறோம் .இந்த மாவு பொருட்களில் 90 சதவீதம் சர்க்கரை உள்ளது .அந்த மாவு பொருட்கள் இட்லி ,தோசை ,பொங்கல் ,இடியப்பம் ,சோறு போன்ற உணவுகள் .இந்த உணவுகளை மூன்று வேலையும் நாம் சாப்பிடும்போது அதிலுள்ள சர்க்கரை நம் உடலில் தேங்குகிறது .இது தெரியாமல் பல சர்க்கரை நோயாளிகள் நான் ஸ்வீட்டே சாப்பிடுவதில்லை எனக்கு சர்க்கரை அளவு குறையவேயில்லை என்று கூறுகின்றனர் ,அதனால் நம் உணவு பழக்கத்தை மாற்ற வேண்டும் .சோறு சாப்பிட்டாலும் அதை குளிரூட்டி மறுநாள் சாப்பிடவேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர் 

sugar

சர்க்கரை நோய் அண்டாமல் இருக்கவும் ,அதிகரிக்காமல் இருக்கவும் அரிசி மற்றும் உருளைக்கிழங்கை எப்படி உண்ண வேண்டுமென்றால், சமைத்த அரிசையை நாள் முழுக்க குளிரூட்டி அதனை மறுநாள் சாப்பிடுவது நல்லது என கூறப்பட்டுள்ளது. சாதத்தை அவ்வாறு குளிரூட்டினால், அது எதிர்ப்பு தன்மை கொண்ட ஸ்டார்ச்சாக மாறும். இதனை நாம் சாப்பிடுவதால் உடலில் உள்ள குளுக்கோஸின் அளவும் கட்டுக்குள் இருப்பதாக பல மருத்துவ ஆய்வு கூறுகிறது

இப்படி சாப்பிடுவது , உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது மற்றும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த செயல்முறையில் சாதத்தை நாம் உண்ணும்போது, டைப் 1 நீரிழிவு நோயாளிகள் உணவு உண்டபின் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு குறைந்திருப்பது பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.