பீட் ரூட் மூலம் சிவப்பு உதடு பெரும் முறை

 
beetroot juice


பொதுவாக  பல பெண்கள் உதட்டுக்கு சிவப்பு சாயம் பூசி வருகின்றனர் .இந்த உதட்டை எப்படி அழகாக இயற்கை முறையில் வைத்து கொள்ளலாம் என்று இப்பதிவில் பார்க்கலாம்
1.உதட்டில் வெண்ணெயைஅடிக்கடி பூசி வந்தால் உதடுகள் மென்மையாக மாறும் .
2.மேலும் சந்தனத்துடன் பன்னீரை கலந்து உதட்டில் பூசி வந்தால் உதடு மேலும் மென்மை யடையும் .
3.மேலும் பீட்ரூட் மூலம் எப்படி உதட்டை அழகு படுத்தலாம் என்று பார்க்கலாம்
4.பீட்ரூட்டை நன்றாக அரைத்துக் கொண்டு அதனுடன் சர்க்கரைக் கலந்து பேஸ்ட் செய்து இதனுடன் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் சேர்த்து உதட்டில் தடவி வரலாம்.

beetroot
5.முதலில் ஒரு துண்டு பீட்ரூட்டை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். 15 முதல் 20 நிமிடங்களுக்கு பிறகு எடுத்துவிட்டு அதை உதடுகளில் தேய்க்கவும்.
6.சில நிமிடங்களுக்கு நீங்கள் இவ்வாறு செய்தால் போதும் உங்களது உதடும் இயற்கையான ரோஜா நிறத்திற்கு மாறிவிடும்.
7.பீட்ரூட்டை பேஸ்ட் போல உருவாக்கி பின்னர் இதோடு சிறிதளவு எலுமிச்சை சாறு, ரோஸ் வாட்டர் மற்றும் சிறிது ப்ரெஷ் கிரீம் பால் சேர்க்க வேண்டும்.
8.இதை நீங்கள் உதடுகளில் தடவி 20 நிமிடங்களுக்கு அப்படியே வைத்திருந்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் நல்லது.