சிறுநீரக தொற்றை தடுக்க உதவுகிறது இந்த நிற பழம்

 
kidney

பொதுவாக பழங்கள் நம் உடலுக்கும் ,மனதிற்கும் ஆரோக்கியம் தரக்கூடியவை .இந்த பலவிதமான பழங்களை ஒன்று சேர்த்து தயாரிக்க படுவதுதான் ரெயின் போ ஜூஸ் ஆகும் .இந்த ரெயின் போ ஜூஸில் ஏழு வண்ண பழங்களை கொண்டு தயாரிக்கலாம் ,அந்த வகையில் இந்த பல வண்ணம் கொண்ட பழங்களால் நமக்கு ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பாக்கலாம் 

1.ரெயின்போ ஜூஸ் சிவப்பு நிறத்தைப் பெற செர்ரி ,ஸ்ட்ராபெரி, மாதுளை பழம், தர்பூசணி மற்றும் ஆப்பிள் பழங்களை பயன்படுத்தலாம். 
2.இந்த சிவப்பு நிற பழங்கள்  சருமத்திற்கு மிகவும் நல்லது. 
3.இந்த சிவப்பு நிற பழங்கள் ஜூஸ் இதயம் மற்றும் DNA வின் ஆரோக்கியத்தை காக்கும்  
4.இந்த சிவப்பு நிற பழங்கள் சிறுநீரக தொற்று தடுக்கவும் உதவுகிறது. 
5.அடுத்து பச்சை ஆப்பிள் வெள்ளரி கீரை மற்றும் செலரி போன்றவற்றை ரெயின்போ ஜூஸில் பச்சை நிறத்திற்காக பயன்படுத்தலாம். 
6.இந்த பச்சை நிற பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், அழற்சியை குறைக்கவும், ஆற்றல் மட்டத்தை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவும். 
7.இந்த பச்சை நிற பழங்கள்  நுரையீரலின் ஆரோக்கியம் மற்றும் கல்லீரலின் செயல்பாட்டையும் மேம்படுத்தும். 
8.அடுத்து நீலம் அல்லது பர்பிள் வண்ணத்திற்காக பிளாக் பெர்ரி, கருப்பு திராட்சை அல்லது பர்பிள் கேபேஜ் பயன்படுத்தலாம். 
9.இந்த நீல நிற ஜூஸ் குடிப்பது இதயம் மூளை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவும். 
10.இந்த பழங்கள்  வயது முதிர்வின் அறிகுறிகளையும் குறைக்கும்.