வெண்பூசணி சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா ?

 
honey

நாம் உண்ணும் காய்கறிகளில் நமக்கு பலவிதமான நன்மைகள் அடங்கியுள்ளது .அந்த வகையில் வெண்பூசணியில் நம் உடலுக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளது .இந்த வெண் பூசணி நம் உடலுக்கு குளிர்ச்சி தன்மையை கொடுக்கிறது .தினம் காலையில் ஒரு க்ளாஸ் வெண்பூசணி ஜூஸ் கொடுத்தால் உடல் குளிர்ச்சி கொடுத்து ஆரோக்கியம் சிறக்கும் .மேலும் மூலநோய் மற்றும் மலச்சிக்கல், சூட்டினால் உண்டாகும் கொப்புளங்கள் போன்ற நோய்களை இந்த பூசணி குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது .மேலும் இந்த பூசணி சாறு அல்சர் எனப்படும் வயிற்றுப்புண்ணின் வீரியத்தைத் தடுக்கின்றன.

pumpkin

மேலும் புற்றுநோய் கட்டிகளுக்கு இரத்தத்தை வழங்குவதை இந்த பூசணி  தடுக்கிறது.மேலும் இதன் நன்மைகளை பார்க்கலாம்

1.சிலருக்கு சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டு அவஸ்தை கொடுக்கும் .இதற்கு தினமும் 120ml வெண்பூசணி சாற்றுடன் ஒரு தேக்கரண்டி தேன் அல்லது சர்க்கரையுடன் கலந்து சாப்பிட்டு வர  குணமாகும்

2.சிலருக்கு சிறுநீருடன் இரத்தம் வெளிவரும் .இதற்கு வெண்பூசணி சாறு பலன் கொடுக்கும் ,

3.சிலருக்கு அல்சரால் இரத்தக்கசிவு ஏற்படும் .இதை  வெண்பூசணி சாறு குணமாக்கும் , 

4.சிலருக்கு பைல்ஸினால் இரத்தக்கசிவு ஏற்படும் .இது  போன்ற சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களைத் வெண்பூசணி தீர்த்து வைக்கும்