பூசணிக்காய் விதைகள், பசலைக்கீரை போன்ற உணவால் ஆண்களுக்கு உண்டாகும் நன்மைகள்
1.காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்,
2.பச்சை நிற காய்கறிகள் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
3.ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட மீன்களை உணவாக உட்கொள்ளலாம்.
4.கார்போஹைட்ரேட் குறைவாக உள்ள டயட்டுகளை பின்பற்றும் போது Testosterone ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிப்பதால் விந்தணுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்
5.Testosterone ஹார்மோன் உற்பத்தியில் Zinc முக்கிய பங்காற்றுகிறது,
6.கோழி இறைச்சி, பூசணிக்காய் விதைகள், பசலைக்கீரை போன்றவற்றில் Zinc அதிகம் இருப்பதால் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்வது பலனை தரும்.
7.இதுதவிர ஆன்டி ஆக்சிடன்டுகள் அதிகம் உள்ள பெர்ரி, நட்ஸ், கொய்யா, வாழைப்பழம், அவகோடா மற்றும் சிட்ரஸ் அதிகம் உள்ள எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றையும் எடுத்துக்கொள்வது பலனை தரலாம்.
8.மறந்தும்கூட பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டாம்,
9.இதில் Trans-fatsகள் அதிகம் இருப்பதுடன் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்கள் விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கையும் குறைத்துவிடுகிறது
10.புகைப்பிடிப்பதும், பான், குட்கா போன்றவற்றை பயன்படுத்துவதும் மலட்டுத்தன்மையை அதிகரிக்கலாம், எனவே இவற்றை தவிர்ப்பதும் அவசியமாகிறது.

