சைவ பிரியர்களுக்கு ப்ரோட்டின் கொட்டி கிடக்கும் உணவுகள்..

 
soya milk

நம் உடலின் தசைகள் வலுவாக இருக்கவும் ,நோய் நொடிகள் நம்மை தாக்காமல் இருக்கவும் நம் உடலுக்கு ப்ரோட்டின் சத்துக்கள் தேவை .ஒரு கிலோவுக்கு 0.8கிராம் புரதம் தேவை .60கிலோ எடை கொண்ட மணிதெரென்றால் அவருக்கு 48கிராம் ப்ரோட்டின் தினமும் தேவை .மேலும் இந்த ப்ரோட்டின் சைவ உணவு உண்பவர்கள் சோயாபீன்ஸ் மற்றும் யோகர்ட் ,சீஸ் மூலம் நிறைய பெறலாம் ,முட்டை மற்றும் பாசி பருப்பு ,துவரம் பருப்பிலும் ஏராளமான ப்ரோட்டின் கொட்டி கிடக்கிறது

paruppu

 மேலும் தோஃபு பன்னீர், டிம்பா மற்றும் எடமே போன்றவை சோயா பீன்ஸ்களில் இருந்து எடுக்கப்படுகின்றது. இவற்றில் ஏதாவது ஒன்றை தினசரி சாப்பிட்டு வந்தால் ஒரு நாளைக்குத் தேவையான புரதச்சத்தை நம்மால் நம் உடலுக்கு கொடுத்து நோய்களிலிருந்து தப்பித்து ஆரோக்கியமாக வாழலாம் .மேலும் புரதம் நிரைந்த உணவு பட்டியல்

1.பச்சைப் பட்டாணியை உணவில் சேர்த்துக் கொள்வதால் அதிகளவில் புரதச்சத்து கிடைக்கும்.

2.சோயா பால் சாப்பிட்டு வந்தால் தசைகள் வலுவாகும்.

3.ஓட்ஸ்-ஐப் பாலில் கலந்து காலை மற்றும் மாலை வேளைகளில் சாப்பிடலாம்.

4.முளைகட்டிய பயிர், சிறுதானியங்கள் மற்றும் கோதுமைக் களி ஆகியவற்றை சேர்த்து சாப்பிடலாம்.

5. புரதச்சத்து நிறைந்த பருப்பு வகைகள், கீரை, காய்கறிகள் மற்றும் பழங்களைச் சேர்த்துக் கொள்வது நல்லது.