உடலில் பிபி வந்திருக்காக ,கொலஸ்ட்ரால் வந்திருக்காக ,கிட்னி பிரச்சினை வந்திருக்காகன்னு பட்டியல் போடுறவங்களுக்கு உதவும் விதை

 
bp

உலகமெங்கும் சுமார் 40-க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன . சிவப்பு, மஞ்சள், பச்சை நிறங்களில் இருக்கும் பூசணிக்காய், அண்டார்டிகாவைத் தவிர உலகின் எல்லா கண்டங்களிலும் பயிரிடப்படுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, மருந்துத் தயாரிப்புகளில்தான் பூசணி விதை அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது. ஆனால் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்க நாடுகளில் உணவிலும் இவற்றை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். நாமோ அந்த அளவுக்கு இன்னும் பூசணி

விதைகளை உணவில் சேர்த்துக்கொள்ளப் பழகவில்லை.

`பூசணியின் காய் மட்டுமல்ல, அதன் விதைகளும் தூக்கி எறியக்கூடிய பொருளல்ல என்பதை நினைவில் வைத்திருந்தால் போதும். இவற்றின் மருத்துவக் குணங்கள் அபாரமானவை

பூசணி விதைகளின் எக்கச்சக்க மருத்துவ மகிமை!

பூசணிக்காயில் உள்ள சத்துக்களை போலவே பூசணி விதையிலும் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.

நீரிழிவு நோயாளிகளும், உடல் பருத்த ஊளைச் சதை நோயாளிகளும் பூசணிக்காயை சமைத்து உண்ணலாம்.

உடல் பருக்காது, உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியையும் தருகிறது.

சிறுநீர் நன்கு பிரிய உறுப்புகளைத் தூண்டுகிறது. திடீர் திடீர் என்று ஏற்படும் வலிப்பு நோய்களையும் குணமாக்கிவிடுகிறது.

பூசணி விதை

இதன் விதைகளை காயவைத்து, பொடியாக செய்து வைத்துக் கொள்ளவும், இந்த பொடியை ஒரு தேக்கரண்டி அளவு பாலில் கலந்து சாப்பிட்டால் உடல் வலிமை பெரும்.

ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தன்மையும், இதயத்துக்கு வலு சேர்க்கக்கூடியதுமான பூசணி விதையில் அதிக அளவு மக்னீஷியம் சத்து உள்ளது.

பூசணியில் உள்ள துத்தநாகச் சத்து, உடலின் எதிர்ப்பு சக்தி மண்டலத்தைப் பலப்படுத்தும். பூசணி விதைகளும், இதிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெயும் ஆண்களுக்கு ஏற்படும் விரைவீக்கம் போன்ற பாதிப்புகளைச் சரிசெய்யப் பயன்படுத்தப்படுகின்றன.

பெண்கள், பூசணி விதையை நெய்யில் வறுத்து சாப்பிட்டு வந்தால், வெள்ளைப்படுதல் குறையும்.

ஆண்கள் பூசணி விதையைப் பொடி செய்து பாலில் கலந்து குடித்தால், உடல் உஷ்ணம் குறைவதுடன் விந்தின் கெட்டித்தன்மை அதிகரிக்கும். பூசணி விதையை நசுக்கி கஷாயமாக்கிப் பருகினால், வயிற்றிலுள்ள பூச்சிகள் நீங்கும்.