மாதுளம் பழ ஜூசுடன் கற்கண்டுகளை சேர்த்து குடிச்சா எந்த நோயை விரட்டலாம் தெரியுமா ?

 
pomogranite

பொதுவாக பிஸ்ஸாவும் ,பர்கரும் சாப்பிடும் காசுக்கு பழங்கள் வாங்கி சாப்பிட்டால் நம் உடலுக்கு ஆரோக்கியம் உண்டாகும் .அதிலும் மாதுளை பழம் வாங்கி சாப்பிட்டால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும் .மேலும் மாதுளை சாறு சாப்பிடுவது கீல்வாதம் உள்ளவர்களுக்கு மூட்டுகளில் சேதம் விளைவிக்கும் என்சைம்களைத் தடுக்க உதவி ,எலும்புகளுக்கு வலு சேர்க்கும் என்று பல ஆய்வுகளில் நிரூபணம் ஆகியுள்ளது .மேலும் இந்த பழம் உளவியல் பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கிறது .மேலும் ரத்த அழுத்தம் ,இதய நோய் ,கொலஸ்ட்ரால் பிரச்சினை ,வீக்கம் ,செரிமான பிரச்சினை ,கேன்சர் அபாயம் போன்ற பல நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது இந்த பழம் .மேலும் இதன் பலன்களை பார்க்கலாம்

madhulai

1.மாதுளம் பழத்தை ஜூஸ் பிழிந்து அதனுடன் கற்கண்டுகளை சேர்த்து தினந்தோறும் காலையில் குடித்து வந்தால் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இனப்பெருக்க உறுப்புகளில் புற்று நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். 2.ஆண்களுக்கு புரோஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி புரோஸ்டேட் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் மற்றும் நுரையீரல் புற்றுநோயின் வளர்ச்சியையும் தடுக்கும்.

3.மாதுளை ஜூஸ் குடித்து வந்தால் விறைப்புத்தன்மை பிரச்சனையை குணப்படுத்தும். எனவே ஆண்கள் மாதுளையை தினமும் சிறிது சாப்பிட்டு வருவது, பாலியல் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும்