முகப்பருவால் முகத்தை காமிக்கவே தயங்குறவங்களுக்கு பருவை நீக்க பல டிப்ஸ்

 
pimple

முக அழகைக் கெடுக்கும் முகப்பருக்கள் வந்துவிட்டாலே தொல்லைதான். அதுவே பெண்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தும். முகப்பருக்கள் வரும் அறிகுறி தெரிந்தாலே அதை நீக்க முயற்சி செய்வது அவசியம். அப்படி உடனடியாக முகப்பருக்களை நீக்க, சில வீட்டுக் குறிப்புகளை இங்கு பார்க்கலாம்.

 தொற்றுக் கிருமிகளை நீக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு. குறிப்பாக இதில் இருக்கும் சல்ஃபர் முகப்பருக்களை நீக்கக் கூடியது. பூண்டை மைய அரைத்து அதன் சாறை பருக்கள் உள்ள இடத்தில் தடவுங்கள்.முகப்பருக்கள் நீங்கி, முகம் அழகு பெறும்.

 பூண்டு : தொற்றுக் கிருமிகளை நீக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு. குறிப்பாக இதில் இருக்கும் சல்ஃபர் முகப்பருக்களை நீக்கக் கூடியது. பூண்டை மைய அரைத்து அதன் சாறை பருக்கள் உள்ள இடத்தில் தடவுங்கள்.முகப்பருக்கள் நீங்கி, முகம் அழகு பெறும்.

பருவமடையும் பொழுது உடலில் ஹார்மோன்களால் ஏற்படும் மாற்றம் காரணமாக முகப்பருக்கள் தோன்றுகிறது.

சருமத்தில் உள்ள செபேசியஸ் என்னும் சுரப்பிகள் செபம் என்னும் எண்ணையை முகத்தில் சுரக்க வைக்கின்றன .இந்த எண்ணை சருமத்தை பொலிவாக வைத்து கொள்ள உதவுகிறது .

முகத்தில் படியும் தூசிகள் மற்றும் அழுக்குகள்  மூலம் முகத்தில் உள்ள சரும துளைகளை அடைத்து கொள்வதால் செபம் எண்ணை வெளியேற முடியாமல்  அடைத்து கொள்வதால் உள்ளே  பாக்டீரியா தொற்று ஏற்பட்டு முகப்பருக்கள் உண்டாகுகின்றது.

முகப்பரு நீங்க வீட்டு வைத்தியம் ( top 10 home remedies for pimples )  கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மரபணு பிரச்சனை .

அதிகமான சர்க்கரையை உணவுகளை எடுத்து கொள்வது .

வறுத்த மற்றும் பொறித்த உணவுகள் .

பதப்படுத்தப்பட்ட உணவுகள் .

தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது .

மனஅழுத்தம் .

பால் பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள்.

அதிகப்படியான உப்பு சேர்த்து கொள்வது ( உதாரணமாக கடைகளில் விற்கப்படும் பாக்கெட் சிப்ஸ் , ஊறுக்காய், மற்றும் அப்பளம் போன்றவை )

ஐஸ் கட்டி ஒத்திடம்.

முகப்பருக்கள் நீங்க ஐஸ் கட்டி ஒத்திடம் கொடுக்கலாம் .  ஒரு சிறு ஐஸ்கட்டி

எடுத்து அதை ஒரு சுத்தமான துணியில் சுற்றி முகப்பரு உள்ள இடத்தில் ஒற்றி எடுக்கலாம் , இப்படி செய்வதால் முகப்பருக்களால் ஏற்படும் எரிச்சல் மற்றும் வலி குறையும் .

எலுமிச்சை சாறு.

எலுமிச்சை பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் கொண்டது ,எலுமிச்சை முகப்பருக்களை  உண்டாக்கும் பாக்டீரியாக்களை  கொல்கிறது. முகத்தில் உள்ள அதிக எண்ணை பசையை நீக்கி தடுக்கிறது .

எலுமிச்சை சாறு எடுத்து அதனுடன் சிறிது தண்ணீர் கலந்து முகப்பருக்களின் மேல் தடவி அரை மணி நேரம் கழித்து தண்ணீரில் முகத்தை கழுவினால் முகப்பருக்கள் நீங்கும் .