முன்னூறு வைத்தியம் செஞ்சும் குணமாகாத மூலத்தை மூணே நாளில் சரிசெய்யும் திப்பிலி வைத்தியம்

 
thuthi ilai for piles

மக்களே !ஒவ்வொரு மூலிகை பொருளுக்கும் ஒவ்வொரு குணமுண்டு .இப்போது நாம் திப்பிலியின் மருத்துவ குணம் பற்றி பார்க்கலாம் .இது பல சித்த வைத்திய மருந்து பொருட்களில் பயன் படுகிறது ,நமது கல்லீரல் மற்றும் மண்ணீரல் நம் உடலின் நச்சு பொருட்களை  வெளியேற்றும் பணியை செய்து வருகிறது .இந்த உறுப்புகளில் வீக்கம் ஏற்பட்டு அது பலவீனமடைகிறது .அப்போது அந்த கல்லீரலில் ஏற்பட்டிருக்கும் நோயை இந்த திப்பிலி குணப்படுத்துகிறது

 piles

சிலருக்கு சளி, ஜலதோஷம் ஏற்பட்டு பல உடல் நல பாதிப்புகள் உண்டாகிறது .இந்த நோயால்  தொண்டை கட்டிக்கொண்டு கரகரப்பான குரல் ஏற்படுகிறது. இதனால் அவர்கள் சரியாக பேச முடியாமல் அவஸ்த்தை படுகின்றனர் . இப்பேற்பட்ட நேரத்தில் திப்பிலி பொடியை சிறிதளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் தொண்டை கட்டு நீங்குவதோடு குரல் வளமும் சிறப்பாக இருக்கும் .

 

நீண்ட நேரம் தினமும் ஒரே இடத்தில் தொடர்ந்து அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு மூலம், பவித்திரம் போன்ற நோய்கள் ஏற்பட்டு நம்மை பாடாய் படுத்தி எடுக்கிறது . இப்படி மூலம் ஏற்பட்டவர்கள் அது குணமாக திப்பிலியை நன்கு பொடி செய்து, அதனுடன் குப்பைமேனி செடியை நிழலில் உலர்த்தி பொடி செய்து  சாப்பிட்டு வந்தால் மூலம் சீக்கிரம் குணமாகி நம் ஆரோக்கியம் மேம்படும் என்று ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர் .