ஆப்பரேஷன் செய்ய வேண்டிய மூல நோயை கூட செலவில்லாமல் சரிசெய்யும் வழி

 
piles

ஒரு மனிதனின் ஆரோக்கியம் அவனது வயிற்றை பொறுத்து தான் இருக்கிறது என்பது ஒரு பழமொழி. அந்த வயிற்றில் இடப்படும் எப்படிப்பட்ட உணவையும் செரித்து, குடல்களின் வழியே சென்று கழிவாக வெளியேறுவது ஒரு ஆரோக்கியமான உடலுக்கு அடையாளமாகும். ஆனால் ஒரு சிலருக்கு உணவுக்கழிவுகளை வெளிவேற்றும் குடல் சார்ந்த உறுப்புகளில் சில பிரச்சனைகள் உண்டாகின்றன. அப்படிப்பட்ட ஒன்று பைல்ஸ் என்று சொல்லக்கூடிய மூலநோய். இந்த மூலநோயை பற்றியும் அதற்கான மருத்துவத்தை பற்றியும் இங்கு தெரிந்து கொள்வோம். பைல்ஸ் வர காரணம் பைல்ஸ் ஒருவருக்கு ஏற்பட முதன்மை காரணமாக இருப்பது மலச்சிக்கல் ஆகும். தினமும் மலம் கழிக்க முடியாதவர்களுக்கு இப்பிரச்சனை உருவாக அதிகம் வாய்ப்புள்ளது. ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து பணிபுரிவது பைல்ஸ் வர ஒரு காரணம் ஆகும். உடலில் உஷ்ணம் அதிகரித்தாலும் பைல்ஸ் வர வாய்ப்புகள் உள்ளது . அதிகம் நீர் அருந்தாமை பைல்ஸ் வர காரணம் ஆகும்.. காரம் மிகுந்த மற்றும் மாமிச உணவுகளை அதிகம் உண்ணல் ஆகியவை இந்த மூலநோய் ஏற்பட காரணங்கள் ஆகும்.

ஆசனவாயின் உட்புறத்தில் உள்ளே மலக்குடலில் இருக்கும் ரத்த நாளங்களில் வீக்கம் ஏற்பட்டு ஆசன வாயின் உட்புறம் வழி குறுகி விடுவதால் மலம் கழிக்கும் பொழுது ஏற்படும் அழுத்தம் காரணமாக சதை கிழிந்து மலத்துடன் ரத்தம் வெளியேறுவதை மூலம் என்கிறோம்.

ஆசனவாயின் உள்ளே தோன்றுவது உள்மூலம் மற்றும் ஆசன வாயின் வெளிபகுதியில் தோன்றுவது தட்டுப்படுவது வெளிமூலம் ஆகும். 

மூலம் நோய் அறிகுறிகள்

மலம் கழிக்கும் பொழுது ரத்தமும் சேர்ந்து வருவது.

ஆசனவாயின் உள்ளே அல்லது அதன் வெளிப்பகுதியில் சுற்றி சதை வீக்கம் (கட்டி ) ஏற்படுவது.

ஆசனவாய் சுற்றி புண் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படுதல்.

 

மலம் கழித்த பின்பும் மீண்டும் மலம் கழிக்க வேண்டும் போல் உணர்வு ஏற்படுதல்.

கழிவறைக்கு சென்று வந்த பின்பு ஆசனவாயில் அதிக வலி உண்டாகுதல்.

மூலநோயின் நிலைகள் ( piles stages)

மூலம் ஆரம்ப நிலை

ஆசனவாயின் உட்பகுதியில் வீக்கம் (கட்டி) மட்டும் காணப்படும்.

இரண்டாம் நிலை

ஆசனவாயின்  சுற்றி  வெளிப்புறத்தில் இருக்கும் எளிதாக தட்டுப்படும், மலம் கழிக்கும் பொழுது வெளியே வந்து மீண்டும் உள்ளே சென்று விடும்

மூன்றாம் நிலை

மூன்றாம் நிலையை நீடித்த மூல நோய் என்கிறார்கள் .இவை ஆசனவாயின் வெளியில் தொங்கும் உள்ளே செல்லாது உள்ளே தள்ளவும் முடியாது. இந்த நிலைக்கு கண்டிப்பாக மருத்துவ சிகிச்சை வேண்டும்

மூலம் நோய் குணமாக உணவுகள்

 மூலம் நோய் குணமாக நார்சத்து உள்ள உணவுகளை சாப்பிடுவது அவசியம் ஆகும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை  சாப்பிடுவதால் மலச்சிக்கல் ஏற்படாது.

பச்சை காய்கறிகளை நிறைய உணவில் சேர்த்து கொள்ளுங்கள் இவைகளில் நிறைய நார்ச்சத்து உள்ளது. குறிப்பாக பீன்ஸ் கேரட் முட்டைகோஸ் வெள்ளரிக்காய் மற்றும் ஏதாவது ஒரு கீரை தினமும் உங்கள்  உணவில் இருக்குமாறு  சேர்த்து சாப்பிடுங்கள்.

 

பழங்களில்  எல்லா பழங்களிலும் நார்சத்து உள்ளது.திராட்சை ஆரஞ்சு ஆப்பிள் மற்றும் நான்கு பழுத்த வாழைப்பழம் போன்றவை  சாப்பிடலாம் .

நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் . ஒரு நாளைக்கு சராசரியாக 2  லிட்டர் முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

இளநீர் மற்றும் மோர் நிறைய குடியுங்கள்.

முள்ளங்கி சாறு ஒரு   40 மில்லிகிராம் தினமும்  காலை  வெறும் வயிற்றில்  குடித்து வந்தால்  மூலம் விரைவாக குணமாகும் .

இரண்டு உலர்ந்த அத்திபழங்களை எடுத்து இரவு முழுவதும் ஊறவைத்து விடுங்கள். மறுநாள் காலையில் இந்த பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்.

அத்திபழத்தை சாப்பிட்ட ஒரு பிறகு அடுத்த ஒரு மணி நேரம்  எதையும் சாப்பிட வேண்டாம். அத்திபழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூலம் நீங்கும் .

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்கள் அல்லது ஒரு வாழைப்பழத்தை ஒரு கப் பாலில் பிசைந்து கொள்ளுங்கள் . இந்த கலவையை ஒரு நாளைக்கு இரண்டு முறை எடுத்து கொள்ளுங்கள் .

மூல நோய் உள்ளவர்கள்  தவிர்க்க வேண்டிய உணவுகள் 

பேக்கரி உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மைதா வினால் செய்யப்படும் பரோட்டா போன்ற உணவுகளில் நார்சத்து சுத்தமாக கிடையாது.

நார்சத்து இல்லாத உணவுகள் சாப்பிட்டால் மலம் இறுகிவிடும் . அதனால் மலம் கழிக்கும் பொழுது அதிக அழுத்தம் ஏற்பட்டு ரத்த கசிவு மட்டும் ஆசன வாயில் வலி உண்டாகும்.

 

சிக்கன், மட்டன்  போன்ற அசைவ மற்றும் காரமான உணவுகளை மூல பிரச்சனை தீரும் வரை சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும்.

காபீ மற்றும் டீ போன்ற பானங்களை தவிர்க்க வேண்டும்.

ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்காரமல் இடையே சிறிது நேரம் எழுந்து நடந்து சென்று வரலாம்